Monthly Archives: திசெம்பர் 2009

ஹைக்கூ – 54

நான் – நானென்று நினைத்ததில் மறைந்து போனது நீயென்பதும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 531

எத்தனையோ பொய்கள் நம் சம்பாசனையில் பொதிந்து போயும் – உண்மை பேசுவதாகவே சொல்லிக் கொள்கிறேன் என்னை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

மெல்லக் காதலித்தோம்

நீ தினமும் வரும் அதே தெருவில் தான் நானும் வருகிறேன் நீயும் வருகிறாய்; சற்று நேரம் முன்பாக வந்து பார்த்தேன் நீயும் முன்பாக வந்தாய்; சற்று தாமதமாக வந்தேன் நீயும் தாமதமாகவே வந்தாய்; நீ என்னை காதலிப்பதாகவோ நானுன்னை காதலிப்பதாகவோ இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை; நீ பார்க்கிறாய் நானும் பார்கிறேன்; நான் சிரித்தால் நீயும் சிரிப்பாய் … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழராய் பிறந்ததில்

உள்ளத்து உணர்வுகளின் வெளிச்சம் கவிதையும், அதன் சப்தம் மொழியுமெனில் – தமிழராய் பிறந்ததில் பெரும் பெருமை கொண்டு வணக்கத்தை கவிதையோடு சொல்லி மொழியை கவுரவிப்போம் தோழர்களே; மொழி நம்மை கவுரவிக்கும்! இனிய அன்பு காலை வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

மனிதம் பிறப்பிப்போம்!

உனக்கும் எனக்குமான நிகழ்வுகளில் பாசமும் போட்டியும் எப்படியோ நிகழ்ந்தே விடுகிறது; யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர் எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ? அந்த மெச்சுதலில் தான் தோன்றி போயின எத்தனை கோடுகள் – நாடென்றும் இனமென்றும் மதமென்றும் ஜாதியென்றும் – மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு! எங்கோ போகிறது நம் வாழ்க்கை கல்கி பிறப்பார் கடவுள் வருவார் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 6 பின்னூட்டங்கள்