நீ முதன் முதலில்
வெளிச்சத்திற்கு வந்து
சூரியனை பார்த்து
கண் கூசுகிறதென –
கண்களை மூடிக் கொண்டு
திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க,
நானும் அம்மாவும்
உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க,
நீ கண்களையும் திறக்க முடியாமல்
முடியவில்லையே எனும்
இயலாமையையும் மறைக்க முயன்று
சிரித்து மழுப்பிய அழகை
எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்????
பதிய இயலாமையில் –
கவிதையாவது செய்தேன்!!

























அருமையான கவிதை. சம்பவங்களை கவிதையாக்குவதில் வல்லவர் நீங்கள் தான். வாழ்த்துகள். ‘ஞாணமடா நீ எனக்கு’ எல்லா கவிதைகளும் மிக மிக அருமை.
LikeLike
கவிதையோடு வாழ்வதால் கவிதை நிகழ்கிறது போல்; வேறொன்ருமில்லைடா செல்லம்மா..
மிக்க நன்றி..
LikeLike