மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது!!

ஒரு நாள் வெல்வோம்

ண் மலை காற்று ஆகாயம் கடல் எங்கிலும் யாரவது மனிதர்கள் இருக்கிறீர்களா??? வருத்தப் படாதீர்கள். இது உங்களை புண்படுத்துவதற்கான கேள்வியல்ல. மனிதம் என்பதை மீறிய நிறைய நாட்களுக்குப் பின் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாமெல்லோரும். அருகே துடிப்பவனை பார்த்து கருணை கொள்ளாத மனசு, எங்கோ துன்புறும் சக உறவை எண்ணி பதறாத உயிர்ப்பு, தன்னால் இயன்றதை பிறருக்கு செய்யக் கூட சுய நலம் தேடும் வாழ்க்கை மனிதத்தாலானதா தோழர்களே???

றப்போம்; மறப்போம்; இதுவரை வாழ்ந்த, கோபம், குற்றம், கொடூரமென அத்தனையையும் மறப்போம். தன்னையும், சக மனிதர்களையும் மன்னிப்போம். இயன்றவரை மனிதம் போற்றி, நட்பு போற்றி, அன்பின் மிகுதியில் உலகத்திற்கான அக்கறையை முன்னிறுத்தி, வாழும் ஒவ்வொரு உயிர்காகவும் சிந்திப்போம், தவறு கண்டு கோபமுறுவதை போலவே நல்லதை கண்டு ஆனந்தப் படுவோம், வாழ்வின் வளமை கண்டு மகிழும் அதே தருணம் பிறர் வருத்தம் காண்கையில் வருத்தப் படுவோம் தோழர்களே.

டு ஆடாகவும் மாடு மாடாகவுமே வாழ்கிறது, மனிதன் தான் தன்னிலிருந்து கீழிறங்கி மிருகமாகவும், மிருகத்திலிருந்து திரும்புகையில் தன்னை கடவுளென்றும் எண்ணிக் கொள்கிறான். கடவுள் தாண்டி மிருகம் தாண்டி தன்னை மனிதனாக அடையாளப் படுத்த மட்டுமே முற்படுவோம். கடவுள், கொள்கை, வெற்றி, சுய மகிழ்ச்சி போன்ற எதுவுமே தன்னெதிரே துன்புறும் ஒரு மனிதனை விட பெரிதில்லை என்று எண்ணுவோம். மனிதனுக்காகவும் பிற உயிர்களுக்காகவும் கருணை கொள்வோம். கருணை கொண்ட மனதிற்கு சுயநலம் அவசியப் படாது. சுயனலமில்லாதவரால் மட்டுமே பிறர் பற்றி சிந்திக்க முடியும். பிறர் பற்றி சிந்திப்பவரால் தான் இந்த சமூகத்திற்கான தன் கடமையை ஆற்ற இயலும் தோழர்களே.

து சரி எது தவறென்று அறிய இயலாத எத்தனையோ அடையாளங்களோடு பிறந்து; வாழ்ந்தும் வாழாமலும் மடிகிறோம். அந்த அடையாளங்களை தனக்கு உடையதாய் மாற்றுவோம். நம் அளவுமானி ‘மனிதம்’ போற்றுவதன்றி வேறில்லையென ஒரு உறுதி ஏற்ப்போம். எதிரே வருபவன் என்னை போலவே, ‘அத்தனை துன்பத்தையும் ஏதோ ஒரு வழியில் கொண்டிருப்பானோ’ என அனுதாபம் கொள்வோம். பிறரை அடிக்கத் துணியும் நேரம்; நமக்கு பட்டால் வலிக்குமே, அப்படித் தானே அவனுக்கும் வலிக்கும் என்று புரிதலை ஏற்படுத்திக் கொள்வோம். எதிரியாயினும் ஒழித்துக் கட்ட எண்ணாமல் அவர் தவறை அவருக்குத் புரியவைக்கவே போராடுவோம்.

ல்லவராய் வாழ்வதென்பது கோழையாய் வாழ்வதற்கான அர்த்தம் என்று நிறைய பேர் எண்ணுகிறார்கள். வீரம் என்பதென்ன? என்னை உன்னால் வீழ்த்திட இயலாது என்று எதிரிக்குப் புரிய வைப்பது மட்டுமே வீரம். எதிரியை தோற்கடிப்பது நம்மில் சிறியவனை வீழ்த்திய கோழை தனமன்றி வேறில்லை தோழர்களே. பிறருக்கு கீழே நின்று அடிமை நிலை கொள்கையில் தனக்கு எத்தனை வலிக்குமோ, சொரணை உருத்துமோ அதே சொரணை ஒவ்வொரு உயிர்க்கும் இருக்காதா??? இருக்குமெனில் மனிதனுக்கிடையே எதற்கு வலியவன் சிறியவனென்னும் கீழ்தர பேதங்கள் என்று அமைதியாக சிந்திப்போம்.

தேநேரம், நீ என்னை அடி உன்னை திருப்பி அடிக்க என் மனது இடம் தராது என்று சொல்லி முதுகு காட்டும் அளவிற்கு மனது இலகிவிடக் கூடாது. மனதை ஒரு கம்பீரமாக வைத்து எதையும் தீர்மானிக்கலாம் தோழர்களே. என்னருகே நிற்கும் என் தங்கையை எவனோ கற்பழித்தால், என் தாயை எவனோ கை நீட்டி அடித்தால், என் வயதான தந்தையை ஒரு மிருகம் கொன்று போட முன் வந்தால், என் வீட்டு ஜன்னல் திறந்து என் அந்தரங்கத்தை பற்றி கேலி பேசினால், என் கூரை பிளந்து வந்து எனை வெளியேற்றிவிட்டு, ‘யாரோ வந்து கேட்கையில் இது என் வீடென்றால் ‘தனக்கான நியாயத்தை உலகத்தின் முன்னிறுத்துவது தவறொன்றுமில்லை. இங்கு தான் நாம் உலகெலாம் பரவி இருந்தும், சோற்றுக்கும் ஒரு பிடி மண்ணுக்கும், சாகும் வரை அலைந்து திரியும், நம் இன மக்களை பற்றி எண்ணுதல் வேண்டும் தோழர்களே.

ன்கு நிதானமாய் மனித கூறுகளோடு யோசித்தால், உலகமெலாம் அலைந்து திரிவது மட்டுமின்றி, யாருமற்ற அனாதை போல், எத்தனையோ உயிர்களை பிற இனத்தவர் கொன்று குவிப்பதையும், ஓட ஓட விரட்டுவதையும், மடிய மடிய கொள்வதையும் ‘ஒரு நடுத் தர பார்வையில் நோக்கி, அவர்களின் ஆதரவற்ற நிலையை நினைத்தால், கண்களில் நீரை வரவழைக்கும் என்பது நிதர்சனம். அந்த பரிதாபமான நிலையை மாற்ற சரியான தீர்வு தான் என்ன???

ம்மால் படத்தில் வரும் கதாநாயகர்களை போல் ஓடி சண்டை போட்டு இந்தா உனது தேசமென பிடுங்கிக் கொடுக்க இயலுமா? அலல்து என் உயிர் போனால் பரவாயில்லையென எதையேனும் செய்து, தன் பற்றினை பறைசாற்றிவிட்டால் போதுமானதா? பிறருக்கென தன்னாலியன்ற உதவி செய்யலாம், பிறருக்காக உயிரையே தந்து விடுவேனென ‘எல்லோராலும்’ முன்வர முடியுமா? ஆனால் எல்லோராலுமே தன்னை ஒரு தமிழராக அடையாளப் படுத்திக் கொள்ள இயலும் இல்லையா. அப்படி தன்னை ஒவ்வொருவரையும் நாம், ‘தமிழராக’ அடையாளப் படுத்திக் கொள்கையில், ஒவ்வொருவரும் தமிழர் பண்பு மாறாது தமிழராகவே ஒன்று கூடும் பொழுதில், தமிழர் தமிழருக்காய் ஒரு சின்ன குரல் கொடுக்குமளவு இனப் பற்று கொள்கையில் பிறர் நம்மை தொடுவதற்கு தைரியமேனும் கொள்வார்களா???

ரு பாம்பு தெருவில் செல்பவரை எல்லாம் கொத்தி கொன்றதாம், கொலை பாதகத்திற்கு ஆளாகி கொடூரமாக வாழ்ந்ததாம். எல்லோரும் ஊர் பெரியவரிடத்தில் சென்று முறை இட்டார்களாம், அவர் இனி அங்ஙனம் நடந்தால் உன்னை கொன்று விட ஆணை பிறப்பிப்பேன் என்று கர்ஜித்தாராம். அப்படியெனில், இனி நான் யாரையுமே கடிப்பதில்லை என உறுதி கொடுத்ததாம் அந்த பாம்பு. அந்த உறுதியில் பிறழாத அந்த பாம்பு நாளுக்கு நாள் தான் யாரையுமே கொத்தாது ஒதுங்கி செல்ல, பாம்பின் மேலிருந்த பயம் எல்லோருக்கும் விலகி, உடன் விளையாட ஆரம்பித்து, கடைசியில் கல்லெறிந்து உதாசீனப் படுத்துமளவிற்கு பாம்பு கீழ்தரமாகிப் போனதாம். ஆளாளுக்கு அடித்து ரத்தம் வழிய அந்த பாம்பு அந்த ஊர் பெரியவரிடமே மீண்டும் சென்று முறையிட்டதாம்.

அதற்கந்த அந்த பெரியவர் “அட, முட்டாள் பாம்பே, நான் யாரையும் கடிக்காதே, துன்புறுத்தாதே, கொள்ளாதே என்று தானே சொன்னேன், பிறரிடம் அடி வாங்கி கோழையாக இரு என்று சொல்லவே இல்லையே என்றாராம். கூடவே, யாரையும் நீ கொத்தி கொள்ளவேண்டாம், அதேநேரம் பாம்பென்றால் அந்த பயத்தையும் மனிதர்களிடத்திலிருந்து குறைத்திட வேண்டாம்” என்றாராம். அந்த பாம்பிற்கான அதே நீதி நமக்குமானது தோழர்களே. நம் நோக்கம் யாரையும் பயம் கொள்ள செய்வதல்ல, ஆயினும், நாம் யாருக்கும் குறைந்தவர்களல்ல என்ற வலிமையை பிறருக்கு புரியவைக்கும் கடமைக்கு உட்பட்டு விட்டோம்.

லகமெலாம் வாழும் மனிதரில் தமிழர் படை திரண்டால், எவரேனும் நம்மை எதிர்த்து நிற்பாரா??? பிறர் நம்முன் நின்று நம்மை காரி உமிழும், நம் மக்களை அடிமை தனப் படுத்தும், கொன்று குவிக்கும் கொடுமைக்கு எவரேனும் துணிவாரா??? தமிழனை அறத்தின் வழி பிழன்று தீண்டினால் இன்னொரு தமிழன் கேட்பான் என்ற நிலையை உலகிற்கு புரிய வைத்துவிட்டால், தீண்டுபவனுக்கு கொன்று குவிப்பவனுக்கு தமிழனை எங்கு தொட்டாலும் மொத்த தமிழருக்கும் வலிக்குமென பயம் வருமா வராதா? வரும் தோழர்களே. நம் ஒற்றுமை இன்மையே நம் இன அழிவிற்கு காரணமென இனியேனும் வருத்தம் கொள்வோம். நம் மொழி கூட மறந்து, திரித்து, பிற மொழியில் பேசுமளவு நம் அடையாளம் துறந்து நிற்பதால் தான் உலகின் மத்தியில் நாம் கேவலப் பட்டுப் போனோம். அதையும் மீறி, லட்சாதி லட்ச உயிர்களை கொன்று குவிக்கையிலும் ஏனென்று கேட்கும் துணிவை நம் எல்லோராலும் அடைய முடியாது போனதன் காரணமும் நம்மிடையே ஒருங்கி இல்லாத நம் ஒற்றுமையன்றி வேறில்லை தோழர்களே..

யாரையும் கொள்ளும் நோக்கம், பிறரை அழிக்கும் நோக்கம் நமக்கு இல்லை, வேண்டாமும். ஆனால், நம்மை பாதுகாத்துக் கொள்ளும் உணர்வு நமக்கு, குறிப்பாக, நம் இனத்திற்கு வேண்டும். அதற்கு நம்மை நாம் தமிழராக மட்டும் வாழ முதலில் உறுதி செய்துகொள்ளல் வேண்டும். பிற மொழியில் பேசுவதை முதலில் நிறுத்துவோம். தமிழரை எங்கு கண்டாலும் வெட்கமின்றி முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே பேசுவோம். இறந்த எத்தனயோ லட்ச மக்களுக்கு உறுதி தரும் பொருட்டாய், இருக்கும் உயிர்களையாவது, முல்கம்பியின் பின்னே முடங்கியும், தான் வீரநடை நடந்து வாழ்ந்த மண்ணை விட்டுவிட்டு அடிமை தனமாக பிற நாடுகளில் வாழும் அப்பாவி மக்களை, நம் உறவுகளை காப்பாற்றும் உறுதி ஏற்போம். அதற்க்காகவேனும், நம்மை முதலில் நாம், ‘தமிழராய்’ அடையாளப் படுத்தி வாழ முற்படுவோம். நம் ஒற்றுமையில் பயம் கொள்ளும் அந்நியருக்கு, உயிர் கொள்ளாத, அதே நேரம் தீண்டினால் கொன்று விடுவோம் என்ற பயம் இருக்குமளவிற்கு வாழ்ந்து, வீரமெனில் என்ன, வாழ்க்கை எனில் என்ன, அன்பு எனில் என்ன, பண்பு எனில் என்னவென்று மெல்ல மெல்ல புரிய வைப்போம், மனிதம் காப்போம், தமிழராய் வாழ்ந்து மனிதராய் உயர்ந்து நிற்போம் தோழர்களே!
—————————————————————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

32 Responses to மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது!!

  1. Tamilparks சொல்கிறார்:

    //யாரையும் கொள்ளும் நோக்கம், …………………………………………..அன்பு எனில் என்ன, பண்பு எனில் என்னவென்று மெல்ல மெல்ல புரிய வைப்போம், மனிதம் காப்போம், தமிழராய் வாழ்ந்து மனிதராய் உயர்ந்து நிற்போம் தோழர்களே//

    மிகவும் அருமையாக அனைத்துலக தமிழ்ர்களையும் ஈர்க்கும் வண்ணமாக எழுதியுள்ளீர்காள், பாராட்டுக்கள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இது ஒரு பொருமல் தோழரே. என்னால் ஒன்றும் செய்ய இயலாத என் கையாலாகா தனத்தின் குமுறல். கண்ணெதிரே அடிபட்ட ஒருவரின் ரத்தம் பார்க்கவே முகம் திருப்பிக் கொள்ளும் நாம் லட்ச லட்சமாய் உயிர்கள் கருகி குவிந்ததை பார்த்தோமே; அதன் வலி. எந்த தீர்வையும் யோசிக்காது உயிரிழப்பு; இழப்பு மட்டுமே என்று வருந்திய வருத்தம். எவரை கொன்றும் அல்ல; அல்லாமல், எவரை வீழ்த்தி, என்ன செய்து, எப்படி என் சமூகத்தை காப்பேன்?????????? யார் வந்து இனி என்ன செய்வார்?????? என்ன செய்து என்ன லாபம்? போன உயிருக்கான பதில்?????????? தமிழன் ஏன் ஏன் ஏன் இப்படி என்று உள்ளுக்குள்ளேயே கொதித்த குருங்கிப் கோபம். எதையேனும் சேய் அல்லது செத்துமடி என்றெழுந்த உணர்சிகளை ஏதோ ஒரு சுயநலம், ஒரு பயம், ஆளுமை, அக்கம் பக்கம், அதிகாரம், அமர்ந்துள்ள இடம் என எல்லாமுமாய் சேர்ந்து மிரட்ட, சிந்தித்து அடக்கிக் கொண்ட; பலரின் வக்ரம். கொதிக்கும் ரத்தத்தை அடக்கி அடக்கி அடிமை பட்டுப் போன எத்தனையோ பேரில் நானுமாகிப் போன குற்றத்தின் ஒரு அடையாளம் இந்தக் கட்டுரை!

      Like

  2. Tamilparks சொல்கிறார்:

    தமிழனிடம் தமிழ் பேச வேண்டும் என்பது என்னை தட்டி சென்னது
    புரிந்தது

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி தமிழ்தோட்டம். தமிழரை காணுகையில் தமிழில் பேசும் உணர்வை நாம் பெறுவதையே கூட நாம்; தமிழராக அடையாளப் பட்டுவிட்டோம் என்பதற்கான ஒரு நிர்மாணமாக; அளவுகோலாக கொள்ளும் நிலையில் இன்றிருக்கிறோம் இல்லையா. இருப்பினும் அது நம் தவறல்ல,

      தம்பி டைம் பாரு, தம்பி பஸ்சு வந்துடுச்சி வா, தம்பி சினிமா பார்க்கலாம், தம்பி டீ குடி, தம்பி பக்கெட் கொண்டு வா, தம்பி ஈவ்னிங் பார்க்கலாம், தம்பி என் லேட்டா வர, தம்பி ஸ்கூல் போனியா, தம்பி வாட்ச் கொடு, தம்பி மம்மி பாரு, தம்பி ஆண்டிக்கு மார்னிங் சொல்லு, தம்பி அங்குள் கூப்பிட்றாரு பாரு, தம்பி இதை வேஸ்ட் பண்ணாத, தம்பி லீவ் எடுக்காத, டிபான் சாப்பிட்டியா, காப்பி குடிச்சியா, சாரி சொல்லு, தாங்க்ஸ் சொல்லு, ப்ளீஸ் கேட்டுப் பழகு இப்படி இன்னும் இன்னும் எவ்வளவு தோழர்களே…. பிற மொழிகளில் புழுத்து வளர்கிறோம் நாம். நமக்கு நம் அதிக பட்ச பெற்றோர்களே அப்படித் தான் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்.

      இனி நாம் அதை மாற்றுவோம். நாமும் அப்படியே சொல்லிக் கொடுத்துவிட்டு நாளை நம் பிள்ளைகளை கண்டித்துப் பயனில்லை, சிறு வயதிலிருந்தே அழகிய.. அசிங்கமான.. கோபமான……… எதுவாகிலும் தமிழில் சொல்லித் தருவோம். நிறைந்த, தெளிந்த தமிழில் பேசுவோம், பெயர் வைப்போம், திரிந்த நம் அடையாளங்களை மாற்றுவோம். நம்மை மீண்டும் தமிழராய் மீட்டெடுப்போம் தோழர்களே!!!

      Like

      • Tamilparks சொல்கிறார்:

        உண்மைதான் நண்பரே, தங்களின் குழந்தை ஆங்கிலம் பேசினால் மிக்க மகிழுகிறார்கள், ஆனால் வெளியில் தமிழ் தமிழ் என்று சொல்லுகிறார்கள்..

        தங்களின் கட்டுரை தமிழின் மீது காதல் கொண்டுள்ளவர்களை நிச்சயம் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை

        Like

      • வித்யாசாகர் சொல்கிறார்:

        மிக்க நன்றி தோழர், நாமொன்று செய்வோம்; நாம் ஒவ்வொருவரும், பிறரை, ஒருத்தரை கூட மாற்ற முயற்சிக்க வேண்டாம். நம்மை மட்டும் நாம், மாற்றுவதில், நாம் அனைவருமே துரிதம் கொள்வோம்.

        விரைவில் நம் தமிழரென்ற அடையாளம், நம்மை கம்பீரப் படுத்தும். பிற மொழிகளும் நமக்கு அவசியம், அதை அம்மொழிக் காரர்களை சந்திக்கையில், அவசியப் படுகையில் அவர்களிடம் மட்டும் பேசுவோம். தமிழர்களை சந்திக்கையில் தமிழை தவிர வேறு எதையும் தவிர்ப்போம்.

        நாளடைவில் எல்லாம் சரியாகும். தமிழ் தனித்து நிலைத்து வாழும். தமிழரை கொன்று விட்டு தமிழை வாழ்விப்பதை விட, தமிழரை தமிழராக வாழ்விக்கையில்; தமிழ் தானே வாழும் என்பதை புரிவோம்!

        Like

  3. Tamilparks சொல்கிறார்:

    // நம்மை மட்டும் நாம், மாற்றுவதில், நாம் அனைவருமே துரிதம் கொள்வோம். //

    சாரியாக சொன்னீர்கள் முதலில் நாம் திருத்திக்கொள்வோம்,

    //தமிழர்களை சந்திக்கையில் தமிழை தவிர வேறு எதையும் தவிர்ப்போம். //

    முதலில் இதையாவது நாம் கடைப்பிடிப்போம்….

    தமிழ் தனித்து நிலைத்து வாழும்.

    Like

  4. முனுசிவசங்கரன் சொல்கிறார்:

    ஆழ்ந்த சிந்தனையில், மிகுந்த பொறுப்புணர்வில் உருவான கட்டுரை. தமிழர் ஒற்றுமையின்றி எப்படியெல்லாம் அலைக்கழிக்க படுகிறார்கள் என்பதை நினைத்து ‘நெஞ்சு பொறுக்காத மனிதர்களுக்கு, ஒரு தீர்வைத்தேடி போவதற்கான உந்துதல்!

    நன்றி…நன்றி…

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ஐயா.. நெஞ்சம் உருக சிந்தித்து ஆழ்ந்து பொருத்து எழுதியது தான், எனினும் இத்தனை அமைதியாக அமர்ந்து நேர்த்தியாக உள் வாங்கும் உணர்வை எக்காலம் நம்மால் எல்லோருக்கும் தர இயலுமோ. எங்கோ யாரும் அறியா ஒரு மூளை காட்டில் பாயும் நதிநீர், நன்று என்றுணர்ந்து அறிந்தோர்,வழி வருவோர் பெற்று விடுவதை காட்டிலும்; நாட்டில் வாழும் அறியாமையை எவ்வழி துடைப்போமோ என்றெல்லாம் தவித்த தவிப்பை, ‘உங்களை போன்றோரின் இவ்விமர்சன பலத்தால் குறைத்துக் கொள்கிறேன் ஐயா. உலகம் நம்மை காணாமலில்லை; ஒரு நாள் வந்து கட்டிக் கொள்ளும் போல். அதற்கு முன்; அதற்கும் பக்குவப் பட்டுக் கொள்வோம்!

      Like

  5. கல்யாணி.K சொல்கிறார்:

    அன்பின் வித்யாசாகருக்கு வணக்கம். கூரிய சிந்தனை, சமநோக்குப் பார்வை, தெளிவு பொருந்திய தீர்வின் அற்புதமான கட்டுரை ஒன்றை தந்துள்ளீர்கள். நிச்சயம் அனைத்து உலக தமிழர்களும் இதை படிக்க வேண்டுமென கேட்கின். அடிக்கடி மறுமொழி தராவிட்டாலும் தவறாமல் உங்களின் படைப்புகளை படித்து மகிழ்வுற்று வருகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆவளோடு காத்திருக்கும் உங்களின் அன்பு வாசகி கல்யாணி.K

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பெரும்பாக்கியம், தங்களை போன்ற சகோதரிகளை வாசகியாய் கொண்டது போல் கல்யாணி. இத்தனை ஆழமாக வாசிக்க முடிகிறதெனில்; எடுத்துக் கொள்ள முடிகிறதெனில் அது உங்களின் தேடலின் மகத்துவமன்றி வேறில்லை. இது போன்ற நல்ல பிறரின் சிந்தனைகளையும் படிப்போம். நல்லவைகளை ஏற்ப்போம், தவறானவை அல்லது பயனற்ற கருத்தை ஒருதலை பட்சக் கருத்தை மறுத்து, பிறர் நலம் பிறழாது வாழ்வோம். தமிழரின் வாழும் சிறப்பில் தரணி நாளை தமிழை கொண்டாடட்டும் கல்யாணி!

      மிக்க நன்றி சகோதரி!

      Like

  6. Mathavan சொல்கிறார்:

    வார்த்தைகளே இல்லை வித்யா. கட்டுரையும் கட்டுரையை விட உங்களின் மறுமொழிக்கான பதில்களும் ரொம்ப நல்லாயிருக்கு. ஒவ்வொரு வரியும் வாசிக்கையில யாரோ வந்து தலையில கொட்டின மாதிரி உணர்ந்தேன். எத்தனை சபாஸ் வேணும்னாலும் போடலாம்

    Like

    • Tamilparks சொல்கிறார்:

      உண்மைதான் தோழரே, என்னுடைய தலையிலும் கொட்டியது உண்மையே..

      Like

      • வித்யாசாகர் சொல்கிறார்:

        அந்த வலி முதலில் எனக்குக் கிடைத்த வலி. இடர்வுகள் நிகழ்வது இயல்பாகிபோன காலப் போக்கிது, உணர்வதில் நிமிர்ந்து கொள்வோம். தவறுகள் சகஜம்; திருத்திக் கொள்வதே மனிதத்துவம் என எண்ணுகிறேன். தங்களின் புரிதலுக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்!

        Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அத்தனை தவரிற்குரியது மொழிக் குழப்புதல், இன அக்கறை மறத்தல், சுயநலம் கொள்ளுதல், மனிதம்று வாழ்தல் என்கிறீர்கள் இல்லையா மாதவன். நல்லது, புரிதலில் பண்பாட்டுக் கொள்வோம். இயன்றவரை பிறர் நலன் கருதி செயல் படலில் நமக்கான அக்கறையும் நம்மை அறியாது நமக்கு வந்து விடும். நாம் பிறரை பற்றி சிந்திக்கும் மனப்பான்மையை பரஸ்பரம் பெற்றுவிடின்; நம்மை பற்றியும் யாரேனும் சிந்திக்காமலா போவார்கள். இருப்பினும், தன்னை காப்போம், அந்த ‘தன்’ என்ற அர்த்தத்தில் விசாலம் கொண்டிருப்போம். மிக்க நன்றி மாதவன்!

      Like

  7. Tamilparks சொல்கிறார்:

    உங்கள் பதில்கள் அனைத்தும் என்னை மெய் சிலிர்க வைக்கிறது

    Like

  8. uumm சொல்கிறார்:

    good..very good vidhyasaagar.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அன்பு உமாவிற்கு மிக்க நன்றிகள், ஆயினும் இதை வேண்டுமென்றே அல்லது உங்களின் நேரமின்மையை நான் புரிந்துக் கொள்வேன் என்று தானே ஆங்கிலத்தில் இடுகிறீர்கள். உங்களின் அழகான தமிழ் ‘உமாவின் பக்கத்திற்கு’ மட்டுமே சொந்தம் போல். இருக்கட்டும், ஆங்கிலத்தை பெற்றுக் கொண்டாலும் நன்றிகளையே திரும்பத் தருவோம்; பாராட்டியதற்கு நன்றியென!

      Like

  9. சிவா சொல்கிறார்:

    சிறப்பான கட்டுரையை எழுதிப் பதிவேற்றிய அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்!!!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் அன்பு சகோ.., நலமென்று நம்புவோம். நம் அடுத்த படைப்பான ‘எத்தனையோ பொய்கள்’ உங்களுக்கும் அதாவது ஈகரையின் அன்பிற்கும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதென்பதை மகிழ்வுடன் தெருவிக்கிறேன். இங்ஙனம்:-

      //ஈகரையில் இணையம் தொட்டு
      நண்பனால் உலகம் வரை விரிந்த நன்றிக்காய்
      தோழர்கள் சிவா மற்றும் பிரகாஷ் அவர்களுக்கு
      சமர்ப்பணம்//

      நண்பன் இணையம் போன காரணத்தால் பிரான்சிலிருந்து சகோதரர் பிரகாஷ் மற்றும் தம்பி சிவா அவர்கள் இணைந்து “வித்யாசாகர்.காம்” ( http://www.vithyasagar.com )என்று ஒரு வலை நடத்திவருகிறார், முழுக்க முழுக்க நம் படைப்புகளை சேகரிக்கும் நோக்கில் துவங்கியுள்ளார்கள். அதற்கான நம் படைப்புகள் மற்றும் விவரங்களை அடுத்த மாதம் தமிழகம் வருகையில் சேமிக்க உள்ளாராம். எவ்வாறு உங்களுக்கெல்லாம் கைம்மாறு செய்வேனோ தெரியவில்லை, தமிழுக்காய் தமிழருக்காய் உங்களை போன்றோர் ஆற்றும் தொண்டினை பதிவு செய்யும் நோக்கில், இப்படி இரு தளங்கள் இருந்ததென்பதை, அவர்கள் காட்டிய அன்பு மகத்துவமானது என்பதற்கு நன்றியை இதையேனும் செய்ய இயன்றேன். இருப்பினும், இன்னும் இன்னும் அனைத்து ஈகரை தோழர்களுக்கும் உங்களை போன்றோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளே உரித்தாகட்டும்!

      Like

  10. C.Rajarajacholan சொல்கிறார்:

    மிக்க அருமையாக இருக்கிறது. மிருக மனிதர்கள் அனைவரும், மனிதர்களாக மாற இந்த தீர்வினை அனைவரும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

    Like

  11. வணக்கம்!

    இன்று உங்கள் கட்டுரை http://www.tamilsworld.net இல் வெளியிடப்படுகிறது.

    நன்றியுடன்

    ஆசிரியர்
    தமிழர் உலகம்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க மகிழ்வுற்றேன். எழுதுவது வெறும் ஆரம்பமே; அதை கொண்டு சேர்ப்பதே நோக்கத்தின் எல்லை. நல்ல விசயங்களை பற்றி நான்கு பேருடன் கலந்து பேசுவதும், நாலாப்புறமும் அறிவித்தலும், இறுதியில் ஒரு நல்ல அதிர்வை ஏற்படுத்தும். அதன் மூலம் நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு, இது சரி என எண்ணத் துவங்குவதின் காரணமாகவும், அதற்கான சீரிய செயல்களை ஆயத்தப் படுத்தலின் முயற்ச்சிகள் தானே இயல்பாக எல்லோருக்குள்ளும் “எண்ணங்களே செயல் எனும் கோட்பாட்டின் கீழ்” நிகழத் துவங்கும். எனவே நம் கட்டுரைகளை படைப்புகளை பிற தளங்களில் பதிந்து உலகின் எல்லை வரை கொண்டு சென்ற அனைவருக்குமே நம் மனதார்ந்த நன்றிகள் பல..

      Like

  12. kovaikkavi சொல்கிறார்:

    GTV-யில் இக்கட்டுரை வாசித்து பொழிப்பு கூறி வித்தியாசாகர் எழுதுகிறார் என்று 2,3 தடவை உங்கள் பெயர் கேட்டு இது நீங்களாகத் தான் இருக்குமென நானும் கணவரும் பேசிக் கொண்டோம். இப்போது உறுதிப்பட்டது. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      இதுபோல் நிறைய இடங்களில் வருகிறது, இவர்களை போல் சிலர் மட்டுமே தெரியப் படுத்துகிறார்கள். அல்லாது போனால் யாரேனும் கூறினால் மட்டுமே தெரிய வருகிறது சகோதரி.

      வாழ்த்திற்கு மிக்க நன்றிகளுடன்..

      Like

  13. யாழ்_அகத்தியன் சொல்கிறார்:

    அருமையான தேவையான கட்டுரை

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி அகத்தியன். ஒரு வரலாற்றுப் பதிவில் பொய்யான தடங்களே பதிய இருக்க உண்மையை பதிவதற்கு, தக்கவைத்துக் கொள்வதற்கு ‘ஒரு அழைப்பு விடும் நோக்கமிந்த கட்டுரை. அடையாளங்கள் ஒவ்வொன்றாய் அழிக்கப் படுகிறது. இருந்தா துயிலம் முதல்; வாழ்ந்த வீடுகள் வரை போகின்றன. ஒற்றுமையின் அவசர தருணத்தை கூட நாம் இப்படி இழந்துக் கொண்டே இருக்கிறோமே… வலிக்கிறது அகத்தியன்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக