“கரையோரம் சென்று
மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா..”ஒரு மீன் சொன்னது
“வேண்டாம் வேண்டாம்..
மனிதன் நம்மை கொன்று விடுவான்” மற்றொரு மீன் சொன்னது
“அசடே இன்னும் உனக்கு
மனிதரை பற்றி புரிய வில்லையா” அந்த மீன் கேட்டது
“உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..
சொல்லேன் பாப்போம்..” மற்ற மீன் கேட்டது..
“மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்”அந்த மீன் சொன்னது
“அப்படியா!!”
“அப்படித் தான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன்..”
இரண்டு மீன்களும் கரைக்கு வர
அதை தொடர்ந்து ஒரு மீன்களின் கூட்டமே கரை நோக்கி ஓட..
வலைஎடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க
ஆழக் கடல் நோக்கி சென்றார்கள்.
கடவுள் மேலிருந்து இவற்றை பார்த்து –
“மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்” என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..
(மீனும் மீனும் இன்னும் நிறைய பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டும்
கரையில் இருந்து கடக்க, வழியில் வந்த மீனவர்களிடம் சிக்கி, சந்தைக்கு வந்து, பணம் தந்து வாங்கி, அறுபட்டு, வறு பட்டு, அவைகளின் வாழ்க்கை அழகு புரியாமல், நீந்தும் அழகு புரியாமல், அவைகளின் வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை!)
வித்யாசாகர்

























மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்
அருமை,அருமை
மிக மிக உண்மையான வார்த்தைகள்
LikeLike
மீனும் மீனும் நிறைய பேசுகிறது செல்வா நமக்குத் தான் புரிவதில்லை..
LikeLike
“மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்” //உண்மை. அதை உணரவைத்த விதம் அருமை.
LikeLike
கடவுள் இன்று திரிக்கப் பட்டுள்ளது சரளா. தவறாகவும் கொடூரமாகவும் பழக்கப் பட்டு விட்டது, அதில் குளிர்காயும் நிறைய பேரை ஒன்றுமே சொல்லி இறைவனின் இருப்பை உணர்த்த இயலாத ஆதங்கம் மனிதன் மீதிப்படி வெளிப் படுகிறது.
என்னால் இறைவனை முழு மனதாக உணர முடிகிறது. ஆனால் முழுதாக உணரும் உணர்விற்காய் காத்திருக்கிறேன், அதுவரை தூசிகள் படிந்த என் வீட்டை எரித்து விடுவதை காட்டிலும் தட்டி சுத்தம் செய்தலில் கடவுள் புலப்படலாமென்பது என் நம்பிக்கை .
அந்த மனதின் ஒரு சிராய்ப்பில் வந்து விழும் வார்த்தைகள் இவையெலாம்.. இன்னும் அங்காங்கே நெடுக…
மிக்க நன்றி சரளா!
LikeLike