திரு.கா.ந.க அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

தயத்தில்
நமக்கே தெரியாமல்
உயரம் தொட்டவர்;

தன் ஐக்கூக்களால்
அவ்வபொழுது
இதயம் சுட்டவர்;

வயதின் உயர்வை
மதிப்பாய் –
கட்டிக் காப்பவர்;

இளமையை சற்று
கூட்டி கூட்டி..
கவிநயம் புரிபவர்;

குடும்பம் போற்றும்
ஈகரை குடும்பமும் போற்றும்
உத்தமரானவர்;

நம் அக்காவால் கூட
ஐயா என்று மதிக்கத் தக்க
பேறு கொண்டவர்;

இனி..
வானம் தாண்டிய
புகழும்;
கால்பட்ட இடமெல்லாம்
சிறப்பும்;
நினைத்த நற்காரியங்களெல்லாம்
கைகூடியும்;
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா பாட
மனதார்ந்த வாழ்த்தினையும் சொல்லி;

நாமும் ஐயா க.ந.கலான் அவர்களின்
பிறந்த தின மகிழ்வை பகிர்ந்துக் கொள்வோம் தோழர்களே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக