ஹைக்கூ – 48

தோ உனக்காக
நான் சேர்த்து வைத்த
கனவுகளையெல்லாம் –
உன் சிரிப்பினை தொட்டுப் பறக்கும்
பட்டாம் பூச்சியோடு பறக்க விட்டுவிட்டேன்;
மீண்டும் நீ –
என்னை பார்த்து சிரிக்காமலா
போவாய்;
சிரித்தால் ஒரு பட்டாம் பூச்சியை
இனமாகத் தருகிறேன்,
அதை பிடித்து உன் இதயத்தில்
பறக்கவிடு –
அது பறக்கையில் உதிரும்
வண்ணங்களில்..
என் கனவுகள் மீண்டும் உனக்காய் பூ பூக்கும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக