நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 1

ப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய்
அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய்
அண்ணனைத்
தம்பியை
அக்காளைத் தங்கையை
மாமனை மச்சானை
மடிதிறந்த மனைவியைப் பேரனைப்
பாட்டனை பூட்டனை
அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை
இன்ன பிறவெல்லாம் கொன்றாய் –
தேசத்து விடுதலையின் பெயரால்.”

ச்சங்களில் –
“எந்த எலும்பு” உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்;

ன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியேறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!”
———————————————
தோழமையுடன்……

கணினி கலைஞன் அருள்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம். Bookmark the permalink.

5 Responses to நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 1

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    ஈழ உயிர் குடித்த ரத்தம் போல; வரிகளின் ஆழத்தில் உறைகிறது மனம்!

    நிறைய எழுதுங்கள். பத்து காகிதம் எழுதிக் கிழித்தால், அதில் ஒன்றேனும் கவிதையாகலாம்! மொத்தமும் கூட கவிதை ஆகலாம். வலிகளின் உணர்விற்கு மொழி வடிவம் கொடுத்தால் கவிதை.

    நிறைய எழுதுங்கள். நம் வலிகளை கவிதைகளாய் பதிப்பதில்; நாளைய தலைமுறையேனும் பாடம் கொள்ளட்டும்!

    பாராட்டுக்கள் அருள்!

    Like

  2. sarala சொல்கிறார்:

    எச்சங்களில் –
    “எந்த எலும்பு” உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்!// உண்மை புரியும்போது மரணத்தின் ஓலம் செவியில் விழும் விழுந்து பயன் என்ன ? அருள் உங்கள் வலியை உணரமுடிகிறது வார்த்தைகளில் படிந்திருகிறது உங்களின் வலிகள் அருமை

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      அது ஒரு வலிப் பொழுதின் உச்சம், இயலாமை எழுத்தாக வார்க்கப் பட்ட வரிகள் சரளா!

      Like

      • sarala சொல்கிறார்:

        உண்மை வித்யா. இயலாமை மட்டுமே இதுவரை அதிக பதிவாகியுள்ளது.

        நான் சந்தோசமாய் இருந்த தருனங்களை விட துக்கப்பட்ட, வேதனை மிகுந்த நிமிடங்கள் இன்னும் நீங்காமல் நெஞ்சில் முள்ளாய் குத்திகொண்டிருகிறது.

        Like

      • வித்யாசாகர் சொல்கிறார்:

        ஏன் சரளா, வாழ்க்கை அத்தனை வலியாகவா உள்ளது. எல்லாம் உள்ளதே வாழ்வு இல்லையா. நல்லதை மகிழ்வாகவும்; இடர்களையும் வருத்தங்களையும் அனுபவமாகவும் கொண்டு முன்னே செல்ல முற்படுங்கள் சரளா. நல்ல எழுத்தின் வீர்யம் உள்ளது உங்களிடம். நிறைய எழுதுங்கள். நம் வருத்தங்களும் வேதனைகளுமே கூட ஓர்நாள் நமக்கான வெற்றியை நமக்கே தேடித் தரலாம்.

        கடவுள் உங்களுக்கு முழு நிம்மதியை தந்து நலமாக வைத்திருக்கட்டும்!

        Like

பின்னூட்டமொன்றை இடுக