காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

ரெல்லாம் மனிதர்களுண்டு
உனக்கோ எனக்கோ ஒன்றென்றால்
மனிதரில் அத்தனை மனிதமில்லையே;

நிலம் செடி கொடி மரம்
எல்லாம் பல்கி பெருகியதுண்டு
எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே;

காற்று நீர் வானம்
பரந்து விரிந்து கிடக்க
‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய்
தானே நம் வாழ்க்கை???

தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும்
இதயம் –
நல்லதை விலகி நிற்குமிடமே நம்
குற்றத்தின் ஆராம்பப் புள்ளியெனக் கருதுக!

சொல்லின் அடி ஆழத்தில் நிகழும்
அர்த்தம் அன்பின் பிறப்பிடமென தோன்றின்
இடைவெளிகள் இறுக்கமாகலாம்,
இறுக்கத்தில் பிறக்கும் தோழமை
உறவென நீளலாம்,
நீண்ட உறவின் அன்பிலும் பிணைப்பிலும் –

காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி
அத்தனையும் –
நம் அனைவருக்குமாகலாம்!

அன்பே அனைத்தின் அடியுரமெனக் கொள்க!
———————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

2 Responses to காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

  1. கவிஞானசக்ரவத்தி's avatar கவிஞானசக்ரவத்தி சொல்கிறார்:

    “காற்று நிலம் நீர் வானம் மரம் செடி கொடி
    அத்தனையும் –
    நம் அனைவருக்குமாகலாம்!”

    ஆக்க வேண்டும்.இல்லையேல் 2012 என்ன அதற்கு முன்பே உலகம் அழிந்தாலும் வியப்பேதுமில்லை.

    அனைவரும் சமம் என்பதை உணர்ந்து.
    அன்பை பகிர்வோம்.

    Like

கவிஞானசக்ரவத்தி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி