எடுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை
மறந்து தொலைத்தால் பெரும்பாடு;
இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன்
இறந்து படைத்த உணர்வோடு!
இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள் – விரதமடா
உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா!
முடுக்குமூளை உணர்வெல்லாம் –
திலீபன் –
மூளைமுடுக்கு உணர்வெல்லாம் –
விடுதலை உணர்வை கொடுத்த யோகியடா; தன் –
உயிரை கொடுத்து ஈழம் படைக்க –
அவன் இறந்தே உரைத்த ஆணையடா!
உலகம் –
திரும்பிப் பார்த்த தமிழனடா
வீரம் –
செறிந்துக் கிடந்த இளைஞனடா;
திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-
இன்று திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-
ஈழம் என்றோ கிடைத்த
செய்தியடா!
எழுந்து வீர
நடை போடு..
விடுதலை கிடைக்காவிட்டால் –
சமர் போடு..
தமிழர் செங்குருதி பாயும் –
இடமெல்லாம்;
தமிழர் செங்குருதி பாயும் –
இடமெல்லாம்;
ஈழம் பிறக்கும் வரைக்கும் –
போராடு!
அன்றைய –
ஐந்து கட்டளை போறாது;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது;
ஈழம்.. ஈழம்.. கிடைக்கும் வரை –
திலீபனின் ஆத்தமா கூட
உறங்காது!!!!
———————————-
வித்யாசாகர்