Daily Archives: ஜனவரி 5, 2010

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 6

நியாயம் அதோ ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது.. பட்டாம்பூச்சியிடம் கேட்டேன் ‘எனக்கு ஒரே ஒரு இறக்கையை குடேன்.. பட்டாம்பூச்சி சொன்னது – ‘நானுனக்கு என் இறக்கைகளை தருகிறேன்; நீ யெனக்கு உன் கைகளை தருவாயா??? ———————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 5

நம்பிக்கை வாழ்கையில் ஜெயிப்பதற்கு ஒரு வழி சொல்லேனென்றேன் பட்டாம்பூச்சியிடம், பட்டாம்பூச்சி சொன்னது ‘பறந்துக் கொண்டே இரு எங்கோ ஒரு மூலையில் உனக்கான ஓரிடம் நிச்சயம் காத்திருக்குமென்று’ நானும் – பறந்துக் கொண்டேயிருக்கிறேன் எனக்கான இடமின்னும் – வரவே இல்லையே யென நினைக்கையில் – உலகம் பேசிக் கொண்டது – ‘அதிக தூரம் பறந்து சாதித்தவன் உலகிலேயே … Continue reading

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 4

கனவு என் – ஆயிரமாயிரம் வர்ணக் கனவுகள் பட்டாம் பூச்சியாகவே பறக்கின்றன; எங்கோ – எட்டா தூரத்தில்! ———————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 3

ஒரு ஆண் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமாமே; எனக்கும் கர்ப்பம் தரிக்க ஆசை! —————– வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 2

ஒருவேளை பட்டாம்பூச்சியை நான் – பிடிப்பதேயில்லை; ‘ஐயோ மனிதனென்று பட்டாம்பூச்சி பயந்து விட்டால்! ————————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக