Daily Archives: ஜனவரி 20, 2010

தெருக் குழாய் (13)

குடிசைவாசிகளின் தெருக்கடவுள் உயிர் வாழ்தலுக்கான – ஏழைகளின் முதல் உணவு! வாழ்ந்ததற்காகான அடையாளத்தில் மறக்க மறுக்கும் – நினைவுச் சின்னம்! வந்து போவோருக்கு தாகம் தீர்க்கும் – எந்திர தன – கொடையாளி! வறுமை தீரா அரசின் கட்டளைக்கிணங்கி இயங்கும் – பகுதி நேர ஊழியன்; கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும் வயிறு நிறையும் மருந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வீடு (12)

கோவில்களின் பிறப்பிடம் நான்கு சுவற்றாலான – மனசு! உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம் போட்டி பொறாமை வெற்றி தோல்வி மகிழ்ச்சி கண்ணீர் – அனைத்தும் சுமந்த மண் ஓவியம்! முயற்சியும் உழைப்பும் குழைந்துக் கொண்ட சாதனை! பண இருப்பை உலகிற்குக் காட்டிக் கொள்ளும் படோடாபம்! நிறைய பேருக்கு சுயமாக கிடைத்திடாத வாழ்நாள் கனவு! தெருவில் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

மதம் – இன்றைய பார்வையில் (11)

மனிதன் – தன் தலைமேல் இட்டுக் கொண்ட முதல் தீ – மதம்! அணுகுண்டு வீசாமல் வெடிக்கும் மனிதக் கொல்லி – மதம்! கடவுளை காட்ட புறப்பட்டு கொலை கொள்ளை கற்பழிப்பை கூட தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி – மதம்! மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் – வளர்க்கும் சக்தி – மதம்! இறைவனை சென்றடைய … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக