Daily Archives: ஜனவரி 14, 2010

நவீன பொங்கல்!

இன்று தைப்பொங்கல். எல்லோரும் ஓடி தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்; நான் எட்டி சாமியை பார்த்தேன் சாமியால் எங்களையோ தொலைகாட்சியையோ சபித்துவிட முடிய வில்லை ; ‘பொங்கலோ பொங்கல்’ தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்; சாமி வெளியே வந்து எட்டிப் பார்கிறார் காஸ் ஸ்டவ்வில்லிருந்து பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது; சாமி கரும்பை தேடினார் கரும்பு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்!

தமிழன் வாழ்ந்த வரலாறு தரணிக்கெல்லாம் தகராறு; பொங்கலோ பொங்கல்! ஆறு போகம் வெளஞ்ச மண்ணில் வீரமெங்கே போச்சிதோங்க பொங்கலோ பொங்கல்! நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது வயித்து பொழப்பு நடக்கலையே பொங்கலோ பொங்கல்! தமிழன் தானே ஆளுறான் தமிழன் தானே சாகுறான் கேட்க நாதி ஒண்ணுமில்லே பொங்கலோ பொங்கல்! பழைய கந்த கொளுத்தல பானை … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்;

தமிழன் – மல்லாக்கப் படுத்து வானம் பார்த்து துப்பிய எச்சில் சிதறல்களில் – கேட்கிறது ‘ஹேப்பி பொங்கலி’ன் சப்தம்; திரும்பி படு தமிழா படுத்தது போதும் எழுந்து நில் நிமிர்ந்து வானம் பார் துள்ளி பூத்து பிரகாசிக்கும் – சூரிய வெளிச்சத்திற்கு – நன்றியறிவிக்கும் பொங்கலை பார்த்து பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல் எனக் கூவு…………. … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து..

வெள்ளை வானத்தின் மவுனத்திலிருந்து – பீரிட்டு வரும் சூரியக் கதிர்களைப் போல் – தான் வரவேண்டும் – ஒவ்வொரு தமிழனுக்கும் அவனுக்கான தமிழ்பற்று! அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | 4 பின்னூட்டங்கள்