Daily Archives: ஜனவரி 5, 2010

ஐயப்ப சாமியும் – தீட்டும்

இருமுடி கட்ட புறப்படுகையில் எதிர்வீட்டு விதவை அக்கா எதிரே வந்தாள் – தீட்டுப் படவே-யில்லை ; தங்கை தலை ஊத்திக் கொண்டாளாம் வெளியே சென்று வீடு வருகையில் மறந்து வந்து – அண்ணாயெனக் கட்டிக் கொண்டாள் தீட்டுப் படவே-யில்லை ; நண்பர் – ரஃபியின் மனைவிக்கு குழந்தை பிறந்ததாய் சொன்னார்கள் தூர நின்று பார்த்து வரலாமென்று … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –71

வீடு சுத்தம் உணவு சுத்தம் பழக்க வழக்கங்கள் சுத்தமென இருந்த நாற்பத்தோராவது நாளில் மனிதருக்குள்ளிருந்த – சாமியை கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதம் தெரிந்தது! —————————————– வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –70

எல்லோரும் சாமி சாமி என்றழைக்கிறார்கள் நானும் விட்டுவிட்டேன்; உள்ளிருக்கும் சாமியை கத்தியழைத்தாவது – வெளியே கொண்டு வரட்டும்! ——————————–

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –69

சுத்தமான நாற்பத்தோரு நாள் விரதத்தில் சாமியானேனோ இல்லையோ மனிதனானேன்! ——————————–

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –68

சாமியோ ஐயப்போ ஐயப்போ சாமியோ சாமி கந்தக தோம் தோம் ஐயப்ப கந்தக தோம் தோம் சாமி சரணம் ஐயப்ப சரணம்; சரணமெழுப்பிக் கொண்டு நடந்தது சாமி; சாமியின் கால்களில் ஒட்டிய அழுக்கு – விடவேயில்லை! ————————————-

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக