Daily Archives: ஜனவரி 4, 2010

மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை; வானவில்! வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு வானம் காட்டும் வர்ண ஜாலம்; வானவில்! கல்வியறிவை கடன் வாங்காது இயற்கை நெய்த கணினி வித்தை; வானவில்! ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த வான தேவதையின் வண்ண மாலை; வானவில்! காற்றில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

எப்பொழுதேனும் கிடைத்துவிடும்; அது!

பேருந்தின் ஜன்னலோர இருக்கை ஒரு கனவாகவே என் காலம்; முதன் முறை அமரும் போது அப்பா பாதுகாப்புக் கருதி நடுவே அமரவைத்தார்; சற்று வளர்ந்துவிட்ட போது தம்பி கேட்பான் விட்டுவிடுவேன் இன்னும் சற்று வளர்ந்ததும் நண்பன் ‘எனக்குடா’ என்பான் விட்டுவிடுவேன் பிறகு காதலி வந்தாள் காதலியும் ஜன்னலோர இருக்கையும் கனவானது மனைவி வந்தாள் என்னால் மறுக்கவே … Continue reading

Posted in கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

தொலைபேசி

நிறைய இதயங்கள் இங்கு தான் உறைகின்றன; உலகின் தூரங்களை ஒரு சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது தொலைபேசி! காதல் பேசியும் அரசியல் தகவலறிவித்தும் குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின் ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது தொலைபேசி! கால வேகத்திற்கு கையில் அடங்கி போயி; உலக விஸ்த்தாரிப்பை ஒரு சொடுக்கலில் அறிவித்து; மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும் அலைபேசியென அர்த்தம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

உலகமெலாம் நீட்டி முழங்கும் தமிழிக்கு

உலகமெலாம் நீட்டி முழங்கும் தமிழிக்கு – நம் கவிதை சிறகு முடிந்து பாச்சரத்தில் – சாமரம் வீசுவோம் வாருங்கள் தோழர்களே.. இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக