Daily Archives: ஜனவரி 25, 2010

சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு நாள்)

தெருவுக்கு தெரு டாஸ்மாக் வீட்டுக்கு வீடு தொலைகாட்சி மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை! படிப்பு முடியும் முன்னரே பாரின் படித்து முடித்தாலும் வெட்டி சோறு பாதி நாள் வேலைக்கு போனால் – மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி சுயநலப் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 15 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 99

மனிதன் – நினைத்துக் கொண்டான் அவன் தலைக்குச் சூடிய பூவும், பூஜைக்கு வைத்த மலர்களும் பேருகொண்டதாய்; பூக்கள் – நினைத்துக் கொண்டன மனிதன் பறித்த பூவும் கிள்ளி – மாலையில் தொடுத்த மலர்களும் இறந்துப் போனதாய்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 98

பூக்கள் ஆயிரம் பூக்கின்றன; ஒருசில பூக்களே நுகரப் படுகின்றன!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 97

மனிதனை மனிதன் வெட்டினால் – தெருவில் போகும் நாய் கூட குறைக்கிறது; எதிர் வீட்டிலிருப்பவன் – மரங்களை வெட்டினான். ஒன்றை கூட என்னால் தடுக்க முடியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 96

மரமும் – செடியுமென் ஜாதியென நினைக்கும் நான் – தெருவில் ஆங்காங்கே பட்டுப் போகும் – மரத்திற்கான சோகத்தை ஏனென்று கேட்பதேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக