Daily Archives: ஜனவரி 27, 2010

காற்றின் ஓசை (5) சிறிது காதல்; சிறிது காமம்

இதற்கு முன் நடந்தது.. மின்னலின் மேகங்கள் டம.. டம.. மேகங்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்ட இடியோசையில் மின்னலொன்று வெட்டி மேகத்தை நனைத்து மின்னலின் மேகங்களாகிய சமயம்.., இரண்டு இதயங்களின் சப்தங்கள் காற்றில் வந்து கலக்கின்றன.. “டேய்.. நீ என்னை கட்டிக்குவியா?” கேட்டது பத்து பன்னிரண்டு வயதை யொத்த பெண்ணிளந்தேவதை மாலினி. ” கட்டிக்குனா.. என் கூடவே … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 105

என் எழுதுகோலை பிடுங்கிக் கொள்வதாய் எதிரே நின்று – நிறைய பறவைகள் கத்துகின்றன; என்னை பற்றியும் எழுது – என்கின்றனவா, என்னிடம் – பாடம் கேள் என்கின்றனவா புரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 10 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 104

நிறைய – உண்மை புரியாமல் தான் கால்சட்டையும் மேல்சட்டையும் மாட்டிக் கொள்கிறோம்; உண்மையை ஆடை – மறைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 103

இரும்புப் பாத்திரத்தில் தாளித்த குழம்பில் மன்சட்டியின் வாசனை கருகிக் காணாமல் – போய்விட்டது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 102

கேஸ் ஸ்டவ்விலும் குக்கரிலும் வேகும் சோற்றுப் பருக்கைகள் மறந்துத் தான் போயின பானையில் வெந்ததை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்