Daily Archives: ஜனவரி 31, 2010

நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

குருதி வெறி கும்பல்களுக்கு உடல் சுட்டு இன அடையாளம் காண்பித்தவன்! இரத்தம் சுடும் உறவிருந்தும் ஒதுங்கி நின்ற தமிழகத்தில் – யுத்தம் புகும் உணர்வூட்டியவன்! தொப்புள் கொடி உறவறுத்து ஈழத் தமிழ் இனத்திற்காய் – தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்! யார் குற்றமும் பகிராமல் என் போன்ற இளைஞன் குற்றமென நெற்றி பொட்டில் நெருப்பெய்தி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 115

வானம் தொடாத சிறகொன்று – காற்றில் அலைந்து அலைந்து திரிந்ததில் வெளியில் தெரியாத – நிறைய முகங்கள் வந்து வந்து களைகின்றன!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 114

இழுத்துப் போர்த்திய புடவைக்குள் – மறைக்க இயலவில்லை அவனை; அரவாணி!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 113

எங்கோ ஒரு சாவு மேளத்தின் சப்தம் தொலைவிலிருந்து – கேட்டுக் கொண்டு தானிருக்கிறது நிறைய அழுகுரல்களையும் மரணத்தின் வாசத்தையும் விழுங்கிவிட்டு!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 112

என் – கழுத்திலிருக்கும் தங்க சங்கிலியும் கைவிரல் மோதிரமும் காப்பும் எத்தனையோ ஏழை பெண்களுக்கு கிடைக்காத தாலியை – நினைவுபடுத்தாமலில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்