மருத்துவ மனை (14)

ரிசையாய் நிற்கும்
நோயாளிகளின் வலி கூட்டும்
நிர்வாகம்;

தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில் –
மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்!

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுசேவை வியாபாரம்;

பணம் தாண்டியும்
மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள்
மருத்துவர்களாக மாறிய இடம்!

உயிரோடு
விளையாடி –
தொழில் கற்கும் ஏகாந்தம்;

உயிர் கொடுத்தும்
உயிர் காக்கும் –
மதம் தாண்டிய மருத்துவாலயம்!

ஏழைகளின் உயிர் வருத்தியும்
உயிர் காத்தும் வளரும் –
செங்கல், மண் கட்டிடம்;

எத்தனையோ பணக்கார மருத்துவர்கள்
இரவு பகலை தொலைத்து –
மருத்துவம் பார்க்கும் மனிதநேய மண்டபம்!

சகோதரிகளின்
கவனக் குறைவால் –
உயிர் தின்னும் பொழுதுபோக்கிடம்;

மருத்துவரில்லாத அவசரத்தில்
உயிர் காத்த – செவிலித் தாய்களின்
அன்பு பூக்கும் தளம்!

இவை எல்லாம் கடந்து –
எத்தனையோ அலறல்களும்
கண்ணீர் கதறல்களும் –
உயிர்பிரிந்த கணப் பொழுதுகளும்
ஒரு ரசாயன மனமாய் காற்றில் கலந்து
காற்றாக மாறிய இடம்!
————————————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

4 Responses to மருத்துவ மனை (14)

  1. கவிஞனசக்ரவர்த்தி's avatar கவிஞனசக்ரவர்த்தி சொல்கிறார்:

    ஆம்.எல்லாத் துறைகளிலும் இந்த இரு வேறு மாதிரியான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    Like

  2. dhamodharan's avatar dhamodharan சொல்கிறார்:

    குடியரசன்று கொடி குத்தி, குழந்தையை அடித்தாய், இந்த பெண்களின் சமூகத்தை கிழிக்கும் நாசக்காரர்களை எப்போது அடிப்பாய்?

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உங்கள் கேள்வி தான் என் பயணமும்; இப்போதைக்கு எழுதவே முடிகிறது, என்றேனும் ஒரு நாளில் எல்லாமே முடியலாம். முடியாத கணமொன்று வருகையில் நானே முடிந்துப் போயிருக்கலாம்.

      வருகைக்கு நன்றி தாமோதரன்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக