Monthly Archives: ஜனவரி 2010

ஹைக்கூ – 106

கால நேர சம்பிரதாயம் பார்பவர்கள் வீட்டிலும் – பிணங்கள் விழாமலில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஜெ.முருகனின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

வணக்கம்! ஒரு உயிருள்ள காதலில் உயிர்த்தெழுந்த கவிஞரிவர்; காலம் திரும்பிப் பார்க்கும் புனித காதலின் பயணமிது. வாழ்தலின் அர்த்தத்தில் பொருள்பட்ட உணர்வுகளின் படைப்பு இது. ஒரு சாமானியன் தன் காதலியின் பிரிவில் வாடி உருகி கசிந்து கரைந்த கண்ணீர் சாரைகள் கோர்த்து கவிதையில் ஆறுதல் பெற்றுக் கொண்ட ஒரு சுவாசத்தின் உயிர்ப்பு இது. சாலையின் வாகன … Continue reading →

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 12

கோடி நட்சத்திரங்களில் உயிர் பெற்றாவது ஒன்றாக நீயிருக்க மாட்டாயா…? உள்ளிழுக்கும் – உயிர்வரை சுவாசத்தில் சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா…? பொங்கும் கடலெங்கும் – அலை முட்டும் கரையிலாவது – உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..? உயிர் குத்தி விழியசையும் காட்சிகளிலெங்கிலும் – நீயாக நீயாக – நீயாக இருக்கக் கூடாதா..? உயிர் கொள்ளும் இதய … Continue reading →

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (5) சிறிது காதல்; சிறிது காமம்

இதற்கு முன் நடந்தது.. மின்னலின் மேகங்கள் டம.. டம.. மேகங்கள் ஒன்றோடொன்று இடித்துக் கொண்ட இடியோசையில் மின்னலொன்று வெட்டி மேகத்தை நனைத்து மின்னலின் மேகங்களாகிய சமயம்.., இரண்டு இதயங்களின் சப்தங்கள் காற்றில் வந்து கலக்கின்றன.. “டேய்.. நீ என்னை கட்டிக்குவியா?” கேட்டது பத்து பன்னிரண்டு வயதை யொத்த பெண்ணிளந்தேவதை மாலினி. ” கட்டிக்குனா.. என் கூடவே … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 105

என் எழுதுகோலை பிடுங்கிக் கொள்வதாய் எதிரே நின்று – நிறைய பறவைகள் கத்துகின்றன; என்னை பற்றியும் எழுது – என்கின்றனவா, என்னிடம் – பாடம் கேள் என்கின்றனவா புரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 10 பின்னூட்டங்கள்