பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 5

நம்பிக்கை

வாழ்கையில்
ஜெயிப்பதற்கு
ஒரு வழி சொல்லேனென்றேன்
பட்டாம்பூச்சியிடம்,

பட்டாம்பூச்சி சொன்னது
‘பறந்துக் கொண்டே இரு
எங்கோ ஒரு மூலையில்
உனக்கான ஓரிடம்
நிச்சயம் காத்திருக்குமென்று’

நானும் –
பறந்துக் கொண்டேயிருக்கிறேன்
எனக்கான இடமின்னும் –
வரவே இல்லையே யென
நினைக்கையில் –

உலகம் பேசிக் கொண்டது –
‘அதிக தூரம்
பறந்து சாதித்தவன்
உலகிலேயே
நான் தானாம்!’
——————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக