சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

லகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து –
மனிதம் நிலைப்பதே இயற்கை;

ண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்கி; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

ல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து –
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!
——————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to சித்தனும் பித்தனும் இயற்கை (4)

  1. செந்தில் குமார்'s avatar செந்தில் குமார் சொல்கிறார்:

    “கோபம வந்தால் கடலுடைத்து
    நிலம் பிளந்து
    எரிமலை வெடித்து
    காற்றை புயலாக்கி; மழையை வெள்ளமாக்கி
    மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
    பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
    நாயகன் நாயகி”

    அழகான ஆனால் அழமான வரிகள் அண்ணா, இயற்கை இப்படி செய்யாவிடில் ,மனிதன் இயற்கையை கொன்று செயற்கையை வாழ முற்படுவான் ,அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதையும் அறியாமல்

    Like

செந்தில் குமார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி