தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ரு வரலாற்றின்
இரத்தம் பாய்ச்சி –
உயிர் தந்த கோடியே;

முடங்கிப் போன இனத்திற்கு
முழக்கம் கொடுத்த –
உயிர்மூச்சே;

உலகின் எல்லை கோடு வரை
ஈழம் – தலைநிமிர
தலைமகனை தந்த வரமே;

தேசியம் கற்பிக்க
எங்கள் தேசியத் தலைவனை
பெற்றெடுத்த பேரே;

உன் மூடிய கண்களிலிருந்து
எந்த சுதந்திரம் –
எங்களுக்காய் பிறக்குமோ பிறக்கட்டும்;

விடுதலை காற்றின்
இலட்சிய மூச்சு – உன் மூச்சென
உலகம் அறியட்டும் –
அறியாமல் போகட்டும்;

உன் மரணமென்னும்
ஒற்றை வார்த்தையின்
இரட்டை அர்த்தம் –
உலகிற்கே புரியட்டும்!
——————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக