(நாவிதர் பிழைப்பு)
உலகத்தை புரட்டி
ஒரு கத்தியில் ஏந்திய
வாழ்க்கை!
அசைவு இருக்கை நான்கும்
சுருங்கிய ஒற்றை அறையும்
வந்துபோனவர்களின் –
வாய் பேச்சிலுமான நகர்தல்!
தீட்டிய கத்தியில்
தொலைந்துப் போன சிரிப்பை
ஒற்றை நாள் செவ்வாய் விடுமுறையில்
தேடி பிடித்துவிடாத உழைப்பு!
மீசை வெட்டுதல் தாடி வழித்தல்
சிகை அலங்காரமென –
கேட்டு கேட்டு; வாழ்வின் அலங்காரங்களை
உதறி விடாமல் –
ஒதுங்கி போன தலைமுறை!
பாட்டன் சொத்து
இல்லாக் குறையை –
பாட்டன் தொழில் தந்து
சிறகுடைத்த பாரம்பரியம்!
நாங்கு சுவற்றில்
நான்காயிரம் சிந்தனைகளும்
ஏக்கங்களுமாய் –
வட்டிக் கடன்களையும் அசைபோட்டவாறு
கத்திரிகளில் கழிகிறது –
நிறைய நாவிதர்களின் காலம்!
—————————————————
வித்யாசாகர்
























