Monthly Archives: ஜனவரி 2010

ஹைக்கூ –80

பெட்டியில் பூட்டி பூட்டி வைத்ததில் காகிதமும் பணமும் ஒரே ஜாதியெனப் புரிந்தது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –79

யாருக்காக நான் சேர்த்தேனோ தெரியவில்லை அடுக்கு மாடி கட்டிடத்தின் மண் மட்டுமே – என் இறப்பை மூடியது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –78

எங்கோ என்றோ யாருடனோ பேசிய நினைவுடனே தேடுகிறேன் யார் யாரோ எதிரில் வருகிறார்கள் யாருமே – நான் தேடியவரல்ல!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –77

பிடிக்கவில்லை என ஒரு முறை சொல்லியாவது விடு; நீ பேசியதை – குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –76

ஒரு காதல் கடிதமெழுதிடாத உன் பார்வையில் தான் நான் பெரிய புள்ளியாய்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக