Monthly Archives: ஜனவரி 2010

ஹைக்கூ – 96

மரமும் – செடியுமென் ஜாதியென நினைக்கும் நான் – தெருவில் ஆங்காங்கே பட்டுப் போகும் – மரத்திற்கான சோகத்தை ஏனென்று கேட்பதேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 95

என் எழுதுகோலை பிடுங்கிக் கொள்வதாய் எதிரே நின்று – நிறைய பறவைகள் கத்துகின்றன; என்னை பற்றியும் எழுது – என்கின்றனவா, என்னிடம் – பாடம் கேள் என்கின்றனவா புரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 94

குடிசையின் – இருட்டை ஒழிக்க ஒரு சிமினி விளக்கிடம் போராடி தோற்கிறது பத்து பாத்திரம் தேய்த்து வாங்கிய பத்தோ இருபதோ!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 93

மண் – குவிந்தும் கெட்டிப் பட்டும் நிறைய வீடுகள் ஆயின; வீடுகளில் – எத்தனை வீடுகளோ(?) குவிந்த மண் எத்தனையோ(?) நிறைய வீட்டிற்கும் நிறைய மனிதனுக்கும் அதை பற்றியெல்லாம் சிந்தனையேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –92

தெருவோரம் பறக்கும் ஒரு – பட்டாம் பூச்சிக்கு இருக்கிறது போல் சுதந்திரம் எனக்கில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்