தொலைபேசி

நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன;
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!

காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!

கால வேகத்திற்கு
கையில் அடங்கி போயி;
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்து;
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் –
தொலைபேசிக்கே பெருமை!
————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to தொலைபேசி

  1. selva's avatar selva சொல்கிறார்:

    அருமையான கவிதை,நண்பரே

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி