வீட்டின் எத்தனையோ நிகழ்வுகளை
உட்கொள்கிறது – ஒவ்வொரு கவிதையும்;
கவிதை படிக்கையில் – காரணங்கள்
அத்தனை புரிவதில்லையென்றாலும் –
காரணமின்றி ஒரு
கவிதையும் கற்பனை குதிரையில்
ஏறிவிடுவதில்லை!
என் கவிதைகளுக்கும் காரணமிருக்கிறது
காரணமில்லையென்றாலும் –
கவிதைக்காய் தேடுகிறேன்;
கவிதையில் மெய்யிருக்கட்டுமே!
இனிய அன்பு வணக்கம் தோழர்களே!
























