பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 7

ஈழத்து வெளிக்குள்ளே;

ழத்து
முட்கம்பிகளுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போனது..,

ஒரு குழந்தை
என்னிடம் வந்து –

அந்த பட்டாம்பூச்சியை
பிடித்துத் தரச் சொல்லிக்
கேட்டது;

அந்த பட்டாம்பூச்சிக்கு
இருக்கும் சுதந்திரம்
எனக்கில்லை யென

அந்தக் குழந்தியிட மென்னால்
சொல்லமுடிய வில்லை!
—————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக