வாட்சும்
பஸ்சும்
காரும்
ட்ரெயினும்
லைட்டும்
சுச்சும்
தமிழென்று நினைத்தே
நிறைய தமிழன் –
செத்துபோய்ட்டான்;
தேங்க்சும் சாரியும்
‘பட்’ டும் ‘சோ’ வும்
எஸ்கூஸ்மியும்
தமிழாகிவிடுமென்றே
நிறைய தமிழன் வெய்ட் பண்றான்;
லெப்டும் ரைட்டும்
கட் பண்ணியும்
வாழ்க்கையில் அவுட் ஆகாத
தமிழன் –
தமிழை சூட் பண்ணியும்
வெற்றிய மீட் பண்றது தான்
கேட்க கேவலமா இருக்கு;
ரைட்டோ தப்போ
வாழ்க்கைய ஸ்ட்ரெய்ட்டா வுடு
எந்த கார்னர்ல முட்டிக்கினாலும்
எல்லாம் எஸ்பீரியன்ஸ் தான்னு
சொல்லிக்கிற தமிழனின்
ஆங்கில டம்பத்தில் – தான்
வீழ்கிறது தமிழ்!
சார் என்று
சொல்லும் தமிழனுக்கு
ஐயா என்று சொல்வதிலும்
பங்க்சன்ல ஜாய்ன் பண்ணி
பார்ட்டி வைக்குற தமிழனுக்கு
பார்ட்டியை விழா என்று
உச்சரிக்கவும் எந்த மானம்
கப்பலேறிப் போகிறதோ தெரியவில்லை!
ஸ்டைலுக்கு பேசுமிந்த மொழி
அறியாமையால் ஆங்கிலம் கலந்து
அறுபட்டு வாழும் தமிழ் –
நம் வாழ்வின் அடையாளத்தையும்
நம் யதார்த்தங்களையும் நாளை –
மொழி திரித்துக் குறித்துக் கொள்ளுமெனில்
யாரால் திருத்தி விட முடியும்?
வேறொன்றும் வேண்டாம்,
வாயில் ஒரு சொட்டு
விஷம் வீழுமெனில்
எத்தனை வேகத்தில் அதை
காரி உமிழ்வோமோ –
அப்படி உமிழ்ந்து விடுவோம் –
இடையே கலந்த ஆங்கிலத்தை
தமிழ் தானே மிஞ்சும்!
————————————————————————————-
வித்யாசாகர்
very nice
LikeLike
உணர்வுகள் ஆங்கிலத்திலும் ஊமையாகிவிடுவதில்லை தான்; தொடர்ச்சியான உங்களின் மறுமொழிக்கும் மொழிக்கான படைப்புக்கான அக்கறைக்கும் மிக்க நன்றிகள் சுமந்தவனாகவே, அன்பினால் கனத்த இதயத்துடன் தொடர்கிறேன்…
LikeLike
உண்மை, தமிழன் தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் கேவலம் என கருதி ஆங்கிலத்தில் பீச்சுகிரார்கள், ஒரு உணவகத்தில் ஒரு குடும்பம் முழுவதும் மற்றொரு மொழியில் உரையாடிக்கொண்டு இருந்தது, நாங்கள் அவர்களை வேறு மொழி பேசுகிறவர்கள் போலும் என எண்ணிக்கொண்டோம், சிறிது நேரத்தில் அவர்களுடன் வந்த ஒரு சிறுமி தமிழில் பேசி விட்டாள், உடனே அனைவரும் இடத்தை காலி செய்து பறந்து விட்டனர், உண்மையாக சொல்லப்போனால் அந்த சமயத்தில் எங்களுக்கு சிரிப்பு அடக்க முடிய வில்லை, எதற்க்காக இந்த கொலைவெறி, தமிழில் பேசினால் என்ன?
LikeLike
தமிழின் சுவை அறியாதவர்கள் போல், அறிந்ததும் ஆங்கிலத்தில் இழந்த நாட்களுக்காய் வருந்துவார்கள் வருந்தட்டும்!
நாம் தமிழ் பேசியாவது; தமிழராய் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வோமப்பா!
LikeLike