ஹைக்கூ – 105

ன் எழுதுகோலை
பிடுங்கிக் கொள்வதாய்
எதிரே நின்று –
நிறைய பறவைகள் கத்துகின்றன;

என்னை பற்றியும்
எழுது – என்கின்றனவா,
என்னிடம் –
பாடம் கேள் என்கின்றனவா
புரியவில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

10 Responses to ஹைக்கூ – 105

  1. ஒரு வேளை அவையும் தங்களைப் போல கவிதை எழுது ஆசைப்படுகின்றனவோ!

    Like

  2. கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

    Like

  3. கவிஞானசக்ரவர்த்தி's avatar கவிஞானசக்ரவர்த்தி சொல்கிறார்:

    அவைகளிடம் நிறைய கற்க வேண்டும் தான்.

    Like

  4. சிவகுமார்'s avatar சிவகுமார் சொல்கிறார்:

    தங்களின் கவிதை அழகை ரசித்த பறவைகள், அது தங்களின் திறமையா அல்லது பேனாவின் திறமையா என அறிய ஆசைப்படுகிறது கவியே!!!

    Like

  5. Ratha's avatar Ratha சொல்கிறார்:

    ம்ஹும்
    என்னைப்போல் சுதந்திரம் மனிதனுக்கு உண்டா எழுத்துலகில் தானும்…
    என்று கேட்கின்றன…..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      சுதந்திரத்தின் நீல அகலம் சில இடங்களில் குறுக்கப் பட்டும், சில இடத்தில் தானாகவே எடுத்துக் கொள்ளப் பட்டும் தான் ராதா, இன்றைய எழுத்துலகம் இயங்குகிறது.

      போகட்டும், எழுத சுதந்திரம் உண்டா, இல்லையா ‘என்று கேட்பவன் சாமானியனாகி விடுகிறான். சுதந்திரத்தை கையில் எடுத்து, அதன்மூலம் பிறருக்கும் பிறருக்கு சுதந்திரத்தை கொடுக்க முடிந்தவனே படைப்பாளியாகிறான்.

      எழுத்தாளனாகவும்!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி