28 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ழத்தின்
வருடங்களை கடந்த
இருட்டு,

ஜெயிப்போ தோற்ப்போ
என்பதான
பயம்,

இரண்டிலொன்றை
பார்ப்போமென்ற
நம்பிக்கை..

எதையுமே பார்க்கவில்லை
சிங்களன் வீசிய
நச்சுகுண்டு;

நியாயத்தை
விழுங்கிக் கொண்டதில்
நச்சு –
பிணங்களாய்
கொப்பளித்தன!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக