Daily Archives: ஏப்ரல் 12, 2010

ஞானமடா நீயெனக்கு – 9

நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம், நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்.., நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ என அடிப்பது போல் பாவனை செய்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 3 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 8

கையசைத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறாய், எனக்கென்னவோ நான் தான் உனை விட்டுப் பிரிவது போல் வலி, நீ – குதூகலத்தோடு ஓடிவந்து – எனக்கொரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிடைத்தாற்போல் ஓடுகிறாய்; எது உனக்கு சந்தோஷம்? எனைவிட்டுப் பிரிந்திருப்பதா இல்லை, யாருமே உனை கண்டித்திராத ஒரு உலகமா???!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 7

இங்கே வா இதை எடுக்காதே அதை செய்யாதே அங்கே போகாதே அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம் மிரட்டுகையில், உனக்கு என் மீது கோபம் வரும்போல்; கண்களை கசக்கி நீ என்னையே பார்ப்பாய். நீ மீண்டும் அங்கே போய் அதை எடுத்து எதையேனும் செய்து எங்கேனும் போய் எனை ஏமாற்றிவிட்டதாய் துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய் நான் மீண்டும் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 6

ஓரிரு பருக்கைகள் தான் கீழே விழுகின்றன நீ எடுத்து வாயில் வைக்கையில் மிரட்டி – நீ கீழே போட்டதும் எடுத்து எங்கோ வீசுவேன். நீ நானென்னவோ நீ தின்பதை பறித்துக் கொண்டதாய் பார்ப்பாய். வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும் உனக்கான ஒரு தட்டு சோறு நான் தின்னாத மிச்சமென உனக்கு தெரியவா போகிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 5

உன் பிஞ்சு விரல்கள் பதிய எனை – கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்; எடுத்துவிட்டால் எழுந்துவிடுவாயென எடுக்கவுமில்லை உறங்கவுமில்லை நீ தூங்கும்வரை விழித்திருக்கிறேன் நான்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக