Daily Archives: ஏப்ரல் 9, 2010

35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மொழி இனம் மதம் யாராகவேனும் எதுவாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும் ஒரு மனிதராகக் கூட என்னாது – சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு துணைபோன தேசத்தில் தான் நானும் குடிமகன்; தமிழன் வேறு; மனிதன் என்று சொல்லத் தான் எனக்கே வெட்கம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 3 பின்னூட்டங்கள்

34 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

காட்டிக் கொடுத்தவன் திருடித் தின்றவன் அண்டிப் பிழைத்தவன் இறந்த – சகோதரிகளின் சவத்தின் மீதேறி ஓடிய ஒருசில துரோகிகள் சிங்கள இனமானான். கைகால் இழந்து ஈழத்தையே சுவாசித்து பட்டினி, போர், துக்கத்தால் இறந்தவன் – ஈழ விடுதலை வெல்லும் வெற்றிக் கொடியை நாளை – விண்ணில் பறக்கவிக்கும் காற்றாயினான்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

33 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

வன்னித் தீவில் ஒரு – குழந்தை கதறி அழுதது. போருக்குப் போன அப்பா இறந்திருக்கலாம்.. அம்மா போருக்குப் போகும் வழியில் கூட இறந்திருக்கலாம்.. குழந்தை – தானும் சென்று ஒரு சிங்களனையாவது சுட்டு என்னிரு – தமிழரை காக்கவில்லையே – யென அழுதது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

32 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

போரில் விடுதலைக்காய் உயிர்விட்டவர்கள் போர்வீரர்கள் ஆனார்கள். அருகில் இருந்தும் வேடிக்கை மட்டுமே பார்த்தவர்கள் – கோழைகளா?? கல்நெஞ்சக் காரர்களா?? எதிர்க்கும் திராணி போதாதவர்களா??? அவரவரே – முடிவு செய்துக் கொள்ளட்டும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

31 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ஒரு இனத்தின் பிணவாடை – உலகமெலாம் வீசியும் மூக்கை மூடிக் கொண்டு சேனல் மாற்றியது அதே சுயநல இனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக