Daily Archives: ஏப்ரல் 19, 2010

மரணத்தை மீட்டெடுப்போம் (26)

இரண்டற கலக்காத நெஞ்சில் வஞ்சமற்று வாழ்கையில், கெடுத்தவனை திருத்த முயல்கையில், அடித்தவனை திருப்பி அடிக்கவும் – அணைக்கவும் முடிகையில், அன்புருதலில், இல்லாதாரிடம் இருப்பதில் – இயன்றவரை பகிர்ந்து கொள்கையில், இருப்பவரை கண்டு ஏங்கி நிற்காமையில், எத்துணிவு பெற்றும் பணிவுருகையில், பணிபவரை மதிக்க கற்கையில், மதியாதாரை புரிந்து கொள்கையில், தவறென்று கண்டால் பொங்கி எழுகையில், தன் தவறாயினும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 60

கனவில் நீ – வருகிறாய், கனவிலிருந்து தொடரும் உன்னையுமென்னையும் பிரித்த சோகம்- கனவுக்கு பின்னும் நீள்கிறது; காலத்தின் கைகளில் நீயும் நானும் எப்பொழுதும் – பிரிந்தே பிரிந்தே கணவனும் மனைவியுமாக!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 59

நானிங்கு சம்பாதிக்கும் பணம் – இரக்கமின்றி தின்கிறது நம் – சந்தோசங்களையும் சிரிப்பையும்; இருந்தும் – உலகிற்கு நாம் நலமென்றே தெரிகிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 58

இங்கு நான் கடக்கும் – ஒவ்வொரு கணமும் நீயில்லாத சொர்கத்தை இழக்கும் – ஒவ்வொரு – துளிகள் என்பதை யாரறிவார்!!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 57

ஐயோ கடிதம் அனுப்பக் கூட கையில் பணமில்லையே – என நீ அழுத அழையில், கடிதமில்லாமலே புரிந்துவிட்டது – நீ எழுதித் தீர்த்திடாத உன் அத்தனை பாரங்களும்!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக