முத்தம் கொடு என்றால்
உதட்டை கன்னத்தை பிடித்துக்
கடிக்கவோ –
எச்சிலொழுக பார்த்து
சிரிக்கவோ மட்டுமே
தெரியுமுனக்கு;
அதை தாண்டி
முத்தமென்றால் இப்படியென
சொல்லாமலேயே –
வரிசையில் நிற்கிறோம்
நானும் –
உன் அம்மாவும்
உன் எச்சிலில் நனைந்த
அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!
























