மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து
ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை;
வானவில்!

ளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு
வானம் காட்டும் வர்ண ஜாலம்;
வானவில்!

ல்வியறிவை கடன் வாங்காது
இயற்கை நெய்த கணினி வித்தை;
வானவில்!

ற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து
உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
வான தேவதையின் வண்ண மாலை;
வானவில்!

காற்றில் மழையில்
கரைந்திடாத கலைந்திடாத
மேகப் பூக்களின் விளம்பரப் பலகை;
வானவில்!

யற்கையின் இயக்கத்திற்கு முகவரி கொடுத்த –
கடவுளின் பெயரெழுதிடாத மவுனத்தின்
வானம் தீட்டிய வண்ண மொழியாக்கம்;
வானவில்!

பூமிக்கு வரும் மழை விருந்தாளிக்கு
தன் மேக கழுத்தில் –
வானம் கட்டிய ஆபரணம்;
வானவில்!

திக்கிரண்டுமாய் நீண்டு வளைந்த
தென்றல் பெண்ணின் ஆடை அலங்காரம்;
வானவில்!

வானவில்லுக்காய்;
வார மாத தவம் போல் காத்திருந்து –
வெளிவராத மங்கை;
வானவில்!

ன்றேனும் எட்டி வானம் பார்கையில்
அதிசயம் பூத்து போன – பூஞ்சரமாய்
சுட்டிக் காட்டும் விரல்நுனியில் – உதடு சுழித்து
முத்தமிட்ட வண்ணப் பெண்ணவள் வானவில்! வானவில்!
————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

2 Responses to மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

 1. கவிஞானசக்ரவர்த்தி சொல்கிறார்:

  ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து
  உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த
  வான தேவதையின் வண்ண மாலை;
  வானவில்!

  அருமையான வரிகள்.நன்றி .

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s