ஞானமடா நீயெனக்கு – 11

ச்சில் –
ஒழுக ஒழுக
எனைக் குடிக்கிறாய்,

உடம்பெல்லாம் ஏறி மிதித்து
கன்னம் கீறி
மூக்கை கடித்து
தலைமுடி பிடித்திழுத்து
உதட்டை கிள்ளி
அப்பப்பா…
உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
கோபத்தை –
ஒரேயொரு முத்தத்தில்
ஒத்திஎடுக்கிறாய்.

நான் கொஞ்சம் சிரிக்கையில்
மீண்டும் – நீ
கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
நீள்கிறது – உனக்கும் எனக்குமிடையே
ஒரு –
முத்தத்திற்கான போர்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

4 Responses to ஞானமடா நீயெனக்கு – 11

  1. Gani's avatar Gani சொல்கிறார்:

    //எச்சில் –
    ஒழுக ஒழுக
    எனைக் குடிக்கிறாய்,

    உடம்பெல்லாம் ஏறி மிதித்து
    கன்னம் கீறி
    மூக்கை கடித்து
    தலைமுடி பிடித்திழுத்து
    உதட்டை கிள்ளி
    அப்பப்பா…
    உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
    கோபத்தை –
    ஒரேயொரு முத்தத்தில்
    ஒத்திஎடுக்கிறாய்.

    நான் கொஞ்சம் சிரிக்கையில்
    மீண்டும் – நீ
    கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
    நீள்கிறது – உனக்கும் எனக்குமிடையே
    ஒரு –
    முத்தத்திற்கான போர்//

    Nallaarukkunga..

    Like

  2. C.Rajarajacholan's avatar C.Rajarajacholan சொல்கிறார்:

    காதல் கவிதை, ஞானமட நீயெனக்கு கவிதை, ஏனோ; இந்த வாழ்க்கை???, அனைத்தும் அருமை அண்ணா..

    Like

பின்னூட்டமொன்றை இடுக