அன்பும் கண்டிப்பும்
குழந்தைக்கு –
ஒருசேர வேண்டுமென
அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன்,
நீயோ .. ஒரு –
சின்ன அதட்டலில்
மிரண்டு போகிறாய்,
அடித்து விடுவேனோ
என பயந்து ஒடுங்குகிறாய்,
உனக்கான என் கோபம்
உனக்காகத் தான் என்றாலும்
அதத்தனைக்காகவும் எனை
மன்னிப்பாயா???
























