Monthly Archives: ஏப்ரல் 2010

ஞானமடா நீயெனக்கு – 10

எல்லாமே – களைந்து கிடக்கும் வீடு, மடித்து வைத்திடாத துணிகள், இங்குமங்குமாய் சிதறிய தின்பண்டம், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு – தெரியுமாத் தெரியவில்லை இது – நீயிருக்கும் வீடென்று!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு ஒரு வேளை ஆனது, பத்து மணிநேர தூக்கம் ஐந்து மணிநேரமானது, மாதத்திற்கு ஒரு முறை வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது, ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் அவகாசமின்றி – தொப்பை வேறு சட்டி போலானது, இனிப்பு தின்பதோ காரம் விரும்பித் தின்பதோ சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம், அச்சுமுறுக்கு, தட்டை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 9

நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம், நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்.., நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ என அடிப்பது போல் பாவனை செய்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 3 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 8

கையசைத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறாய், எனக்கென்னவோ நான் தான் உனை விட்டுப் பிரிவது போல் வலி, நீ – குதூகலத்தோடு ஓடிவந்து – எனக்கொரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிடைத்தாற்போல் ஓடுகிறாய்; எது உனக்கு சந்தோஷம்? எனைவிட்டுப் பிரிந்திருப்பதா இல்லை, யாருமே உனை கண்டித்திராத ஒரு உலகமா???!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 7

இங்கே வா இதை எடுக்காதே அதை செய்யாதே அங்கே போகாதே அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம் மிரட்டுகையில், உனக்கு என் மீது கோபம் வரும்போல்; கண்களை கசக்கி நீ என்னையே பார்ப்பாய். நீ மீண்டும் அங்கே போய் அதை எடுத்து எதையேனும் செய்து எங்கேனும் போய் எனை ஏமாற்றிவிட்டதாய் துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய் நான் மீண்டும் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக