Monthly Archives: ஏப்ரல் 2010

ஞானமடா நீயெனக்கு – 6

ஓரிரு பருக்கைகள் தான் கீழே விழுகின்றன நீ எடுத்து வாயில் வைக்கையில் மிரட்டி – நீ கீழே போட்டதும் எடுத்து எங்கோ வீசுவேன். நீ நானென்னவோ நீ தின்பதை பறித்துக் கொண்டதாய் பார்ப்பாய். வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும் உனக்கான ஒரு தட்டு சோறு நான் தின்னாத மிச்சமென உனக்கு தெரியவா போகிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 5

உன் பிஞ்சு விரல்கள் பதிய எனை – கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்; எடுத்துவிட்டால் எழுந்துவிடுவாயென எடுக்கவுமில்லை உறங்கவுமில்லை நீ தூங்கும்வரை விழித்திருக்கிறேன் நான்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 4

நீ தூங்கும் போது பாடும் – தாலாட்டில் எந்த ராகமும் இல்லை; நான் – அம்மா என்பதை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 3

நீ – என் செல்லமா அப்பா செல்லமா எல்லோரும் கேட்கிறார்கள்; நாங்கள் தான் உன் செல்லமென அவர்களுக்கெப்படித் தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 2

நீ என் மடி மீது படுத்து பால் குடித்துக் கொண்டிருக்கிறாய்; நானுன் – மடியில் பிறக்கும் வரம் கேட்டு மீள்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக