35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மொழி
இனம்
மதம்
யாராகவேனும்
எதுவாகவேணும்
இருந்துவிட்டுப் போகட்டும்
ஒரு மனிதராகக் கூட
என்னாது –
சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு
துணைபோன தேசத்தில் தான்
நானும் குடிமகன்;
தமிழன் வேறு;
மனிதன் என்று சொல்லத் தான்
எனக்கே வெட்கம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

3 Responses to 35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

  1. Poikaaran's avatar Poikaaran சொல்கிறார்:

    என்ன செய்வதண்ணா, எவர்மீது காரி உமிழ்ந்தாலும் அது நம்மீதே விழுகிறது..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      நானும் எச்சிலில் நனைந்து போன பிறகே, என்னையும் குற்றவாளியென்று உணர்கிறேனப்பா. ஆயினும் இந்த கவிதைகள் யாரிடத்துமுள்ள குற்றம் காணவோ, யாரையும் குறைத்துப் பேசவோ எழுதப் பட்டுள்ளதல்ல. சமூகத்தை தூர நின்று பார்க்கையில் என் மீது உங்களுக்கொரு கோபம் வராதா, அப்படி ஒரு கோபம் தான் எனக்குமானது. அந்த கோபத்திற்குள் நானும் அடக்கம் என்பதை அறிந்தே எழுதுகிறேன். எழுதுவதின் ஒரே நோக்கம் அந்த உணர்வுகளை, ஒரு இனம் கதற கதற துடிதுடிக்க மாய்த்தொழிக்கப் பட்டும் நம்மால் ஒன்றும் முழுதாக செய்திட இயலாத நிலையில்; அவர்களுக்கென்று எதையேனும் செய்திடல் வேண்டுமென்ற எண்ணத்தை, துடிப்பை மட்டுமாவது, அவர்களுக்கென்று எதையேனும் இனியாவது செய்து என் இனத்தை காப்பேன் என்ற உணர்வை மட்டுமாவது நமக்குள் தக்க வைத்துக் கொள்வதன்றி வேறில்லை பொய்காரன்!

      தங்கள் பெயரை பெயரை குறிப்பிடுங்களேன், ஏனிந்த பொய்கார வேஷம். கெட்டவர்கள் தன்னை நல்லவர்களெனக் காட்டிக் கொள்வதாலோ???

      Like

  2. Poikaaran's avatar Poikaaran சொல்கிறார்:

    ஆம் அண்ணா, சமூகத்தின் மீது ஏதோ ஒரு கோபம். யார் தான் உண்மையாக வாழ்கிரார்கலேன்ர கோபத்தில்தான் எனை போய்காரநேன்று மாற்றிக் கொண்டேன். என் உண்மையான பெயர்முரளிதரன். தங்களின் பற்றும் கோபமும் யாரையும் உடைக்காது வருந்தாதீர்கள், மாறாக வளர்கவே செய்கிறது எங்களை. மிக்க நன்றி அண்ணா உங்களின் பெருமிதமான அன்பிற்கு.

    Like

Poikaaran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி