கூறு கெட்ட மனுஷன் மேல;
கூவம் நாத்தம் தாங்கல;
மானங்கெட்ட மனுஷன் மேல
கோபம் மட்டும் தீரல!
மானம் ரோசம் கோபம் போச்சி
சண்டை மட்டும் மிச்சமாச்சி..
சண்டை சண்டை சண்டை
எங்கப் பார்த்தாலும் சண்டை…
சோறு தின்ன சண்டை
துணி எடுக்க சண்டை
மாடு வாங்கி மேய்க்க சொன்னா
அதிலும் –
உன் மாடு சரியில்ல – என் மாடு
சரியில்லைன்னு சண்டை;
வீட்டுக்குள்ள சண்டை
தெருவுலயும் சண்டை
ஊறு விட்டு ஊறு வந்தா
உன் ஊரா – என் ஊரான்னு சண்டை
ஊர் விட்டு வெளிய வந்தா
சென்னையா மதுரையான்னு சண்டை
டெல்லிவரை பெட்டி தூக்கிட்டா
தமிழா இந்தியான்னு சண்டை;
வந்த நாய பார்த்தா இருக்கும் நாய்க்கு
சண்டை
இருக்குற நாய பார்த்தா
பெரிய நாய்க்கு சண்டை,
பெரிய நாயப் பார்த்தா – என் வீட்டு
நாய் சின்னதா இருக்கேன்னு
இவனுக்கும் அவனுக்கும் சண்டை;
புகுந்த வீட்டுக்கும்
பிறந்த வீட்டுக்கும் சண்டை,
பிறந்த வீட்டுக்கும் மருமகளுக்கும் சண்டை
மருமகளுக்கும் மகளுக்கும் சண்டை
மகளுக்கும் மகனுக்கும் சண்டை
மகனுக்கும் அப்பாவுக்கும் சண்டை
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை
அம்மாவுக்கும் அடுத்தவீட்டு அக்காவுக்கும் சண்டைன்னா சண்டை –
அப்படி ஒரு சண்டை;
நாடும் நாடு(ம்)னு வந்தா
என் நாடுன்னு சண்டை,
மாநிலம் மாநிலமென்றால்
எம் மாநிலமென்று சண்டை,
ஊரும் ஊரு(ம்)னு வந்தா
என் ஊருன்னு சண்டை,
தெருவுக்கு தெருவுன்னா
என் தெருவுன்னு சண்டை,
வீட்டுக்கு வீடுன்னா
என் வீடுன்னு சண்டை,
நீயா நானா என்று வந்தால் –
‘நான்‘ என்பதற்கே இத்தனை சண்டையும்; எனில்,
ஒருதுளியேனும் வெட்கப் படுவோம்.
சுயநலத்தை விட்டொழிப்போம்!!
————————————————————————–
வித்யாசாகர்

























nalla irukku kavithai
LikeLike
மிக்க நன்றி தீபன். எப்பேர்பட்ட சிவதீபனின் பெயர் உங்களுக்கு, வாழ்த்துக்கள்!
LikeLike
ஞாயிற்றுக்கிழமை அதுவுமா ஏன் இவ்வளவு கோபம்?
மதியம் நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போடுங்கள், டென்ஷன் குறையும் 🙂
LikeLike
மிக்க நன்றி ராபின், நான் குவைத்தில் வசிப்பதால், இன்று விடுமுறை இல்லை. எனினும் இது சாப்பிட்டு தூங்குவதால் தீரும் கோபமல்ல. சாப்பிட்டும் தூங்கியும் வாழ்ந்தும், சரியாக வாழாத கோபம். பிறரின் தீரா வீண் கோபத்திற்கு காரணம் சுயநலமெனில் அதை அறுத்தெறிய உற்ற கோபம்.
சுயநலமெல்லாம் பொதுநலமாகும் பட்சத்தில்; உணவு தூக்கம் கூட அவசியப் பட்டிருக்காது டென்சன் குறைய, எல்லோருமே மகிழ்வாய் வாழ்வதில்; டென்சனே இல்லாது கூட போயிருக்கலாம். மிக்க நன்றி ராபின். தொடர்ந்து பேசுங்கள்..
LikeLike
//எனினும் இது சாப்பிட்டு தூங்குவதால் தீரும் கோபமல்ல. சாப்பிட்டும் தூங்கியும் வாழ்ந்தும், சரியாக வாழாத கோபம். பிறரின் தீரா வீண் கோபத்திற்கு காரணம் சுயநலமெனில் அதை அறுத்தெறிய உற்ற கோபம்//
மிக்க அருமை அண்ணா
LikeLike
உங்களை போன்றோருக்கே நன்றியின் கடனனைத்தும் படுவேன் முரளிதரன். உள்ளே ஊரும் உணர்வுகளை பதிகிறேன், உங்களை போன்றோராலேயே சரியோ என்று மெய்ப்பித்தும், தவறெனில் திருத்தியும், போற்றுகையில் கவிதையென்றும் அர்த்தம் கொள்கிறேன். மிக்க நன்றிப்பா..
LikeLike
உண்மைய சொல்லுறீங்க அண்ணா; சூப்பர்!
LikeLike
நல்லதை சொல்லத் துணிகையில் உண்மை ஒளிவட்டமாகிறது போல். மிக்க நன்றி சோழா!
LikeLike
கவிதையில் சண்டை போட்டு இருக்கிறீர்கள். மிக நன்று.
LikeLike
ஆனால் சுயநலமில்லா சண்டை என்பதை மட்டுமிங்கே பதிவு செய்கிறேன் செல்லம்மா, மிக்க நன்றி!
LikeLike