ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு
ஒரு வேளை ஆனது,

பத்து மணிநேர தூக்கம்
ஐந்து மணிநேரமானது,

மாதத்திற்கு ஒரு முறை
வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது,

ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும்
அவகாசமின்றி –
தொப்பை வேறு சட்டி போலானது,

னிப்பு தின்பதோ
காரம் விரும்பித் தின்பதோ
சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம்,
அச்சுமுறுக்கு, தட்டை, ஒட்டையடை சமாச்சாரமோ
அறவே மறந்து போனது,

ஸ்டைலுக்கு பிடித்த சிகரெட் அணைந்து
ருசிக்க குடித்த பீரும் விஸ்கியும்
பழக்கத்திலிருந்து தீர்ந்து போனது,

சினிமா –
எப்பொழுதாவது
பொழுதை ஆக்கும் படங்கள் வந்தால்
மட்டுமே என்றானது,

ர் சுற்றும் அளவு நேரமோ
அத்தனை அதிக பணமோ
கையிருப்பில் – இருப்பதில்லை,

ங்கு போய் எங்கு வந்தாலும்
கணக்குப் பார்த்து பார்த்து
வட்டிக்குக் கடன் வாங்கும் அளவிற்குக் கூட
வாழ்தலின் நிம்மதியை
வாங்க இயலா அன்றாட போக்கு,

தில் வேறு –
அம்மா, அப்பா,
உறவு, நட்பு, சுற்றத்தார் என
இறப்பின் இழப்பு
சொல்லி மீளா வலியும் அழுத்தமுமாய்
தன் மரணம் வரை நீளும் கொடுமை –
தாங்க முடியா ரண பாரம்; வேதனையின் உச்சம்,

ன்றோ பார்த்தவன்
எங்கோ பழகியவனை கூட
நினைத்து வருத்தப் படுமளவிற்கு
பாதிக்கப் பட்ட ஒரு
பண்பட இயலா பதட்டமான மனநிலை,

வாழ்வின் தூரகால
இடைவெளிக்குப் பின்
திரும்பிப் பார்க்கையில் –
எதையுமே
பெற்றுக் கொண்டதாய் இல்லாமல்
விட்டுசெல்லவே வந்ததாய் உறுத்தும்
ஒரு பாவப் பட்ட பிறப்பு,

ஆக, எத்தனையோ வலியினூடே
பல போராட்டங்களை தாண்டியும்
வாழ முற்படுகையில் –
உள்ளே ஒரு மனசு
கூட்டி கழித்துப் பார்த்து
‘ஏனோ’ இந்த வாழ்வென
நொந்துக் கொண்டு தானிருக்கிறது.

முடிவாய்;நொந்து போகையிலும்
சிந்திப்பது தான் –
வாழ்க்கை போலும்!!
——————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

6 Responses to ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

  1. Tamilparks சொல்கிறார்:

    அருமை வாழ்த்துக்கள்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      பலபேரின் வாழ்க்கை பலதரப் பட்டவாறு இருப்பினும், கட்டாய கால நிகழ்வுகளுக்கு மத்தியிலே ஸ்தம்பித்து விடும் ஒரு மனநிலைக்கு உட்படுகையில் தெளிதலே நன்று, எனினும், சற்று ஆழ்ந்து நீண்டு விட்டது கவிதை, போலும். போகட்டும், உள்ளே உறைந்து போயிருக்கும் உணர்வுகளை வெளியெடுத்து உமிழ்ந்துவிட்டு வாழ்தலின் கட்டாயம் உணர ஒரு வரியேனும் பயன்படுமென நம்புகிறேன். வாழ்த்திற்கு நன்றி தமிழ்தோட்டம்!

      Like

  2. Starjan சொல்கிறார்:

    வித்யாசாகர் உங்களை
    வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி ஸ்டார்ஜன். பிறருக்கு உதவ தன் திறமையை கையாண்டு; தன் எழுத்து யுத்தியால் எங்களை போன்றோரை கவுரவப் படுத்தியது போற்றத் தக்கது. உங்களின் நடை ரசிக்க வைக்கிறது. அந்த ரசனையில் எட்டி தலை காட்டுகிறது எங்களை போன்றோரின் உழைப்பும். வாழ்க!

      Like

  3. அருமையான கவிதை. உங்கள் கவிதையில் வாழ்கையின் சலிப்பு தெரிகிறது.

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      என் உலகம் எண்பது உன்னில்லிருந்தே ஆரம்பித்திடும், நீண்டு முடிவது சமூகத்தின் கடை கொடி மனிதன் வரை என்பதால், இது எனக்கான சலிப்பு மட்டுமல்ல, என் சமூகத்தின் ஒவ்வொரு பிரிதிநிதிக்குமானது. இதெல்லாம் தாண்டி சுயநலமாய் சொல்வதெனில்; நீயிருக்க எனக்கென்ன சலிப்பு மிட்ச்சப் பட்டுவிடப் போகிறது…?????

      Like

Tamilparks -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி