ஞானமடா நீயெனக்கு – 23

நீ
என்பதன் அர்த்தம்
உலகம்
வானம்
பூமி
கடல்
காற்று
தென்றல்
அருவி
மழை
மலர்வனம்
மெல்லிசை
பாடல்
கவிதை
புத்தகம்
வியப்பு
பலம்
அதிஷ்டம்
நிம்மதி
ஏதுமில்லை –
குழந்தை என்பதொன்று
பெரிது!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 23

  1. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    ஞான‌மடா நீ என‌க்கு…

    அனுப‌வித்து எழுத‌ப‌ப‌ட்டிருக்கிற‌து…எல்லாம் தந்தைக‌ளும் அனுப‌விக்கும் உணர்வே இது அனைத்தும். எனினும், அதை அழ‌காக‌ க‌விதை வ‌டிவ‌த்தில் வ‌டித்து விட்டீர்க‌ள்..இது ஒரு சுகானுப‌வ‌ம்….வாழ்க்கையில் அனுப‌விக்க‌ வேண்டிய‌ ஒன்று. சுக‌மான சுமை…

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மகன் முகிலின் எச்சில் வாசம் நினைவில் இருந்து நீங்குவதே இல்லை விஜய். அவனின் அன்பு முத்தங்களாய் நிறைய நிறைய இங்கே கவிதைகளாய் கனக்கிறது. எழுதிடாத அல்லது எழுதி வெளியிடாத பிற நிறைய பெற்றோரின் உணர்வாகவும் இது இருப்பதால் ‘இவைகளை பதிவாக்கி முகிளுக்கே சமர்ப்பிக்க இருக்கிறேன். மிக்க நன்றி விஜய்; வந்தோம் போனோம் என்றில்லாது ஒரு படைப்பாளியை மனதில் கொண்டு நீங்கள் தரும் சீரிய விமர்சனங்கள் ‘மனதை அன்பால் தொடுகிறது. வாழ்க!

      Like

Vijay -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி