90 வாழ்க்கையை படி!

குடிப்பவன் குடிக்கிறான்
நல்லவனென நடிப்பவன்
நடிக்கிறான்,
இருப்பவனின் நாற்றம்
வெளியில் தெரிவதில்லை.

இல்லாதவனின் நாற்றம்
பெரிது படுத்தப் படுவதில்லை.

இரண்டுக்கும் மத்தியில்
பண்பாடு குலைகிறது
அநாகரிகம் கூட
நாகரீகமென மெச்சப் படுகிறது;
காலமாற்றம் என்னும் ஒற்றை
பெயரில் –
நிறைய பேர்
தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் –
கால ஏட்டில்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to 90 வாழ்க்கையை படி!

  1. aarul's avatar aarul சொல்கிறார்:

    நல்ல கவிதை..

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி அருள்..

      நம் ஓரிரு கவிதைகள் என்ன செய்துவிடும் அள்ளிக் குவியும் தமிழ் களஞ்சியமென நீங்கள் நடத்தும் வலைதளத்தின் முன்..

      தொடர்ந்து அக்கப் பூர்வமான கருத்துக்களை இன்னும் பதிந்து, முன்னிலை கொள்ளாவிட்டால் பரவாயில்லை, தன்னிலை கொள்ளுங்கள். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக