Monthly Archives: ஏப்ரல் 2010

காதலின் மறக்காத பொழுதுகள் – 51

இந்தா – உனக்கான ஒரு சொட்டுக் கண்ணீர் பரிசு. எதுவுமே எழுதிடாத வெள்ளை தாளில் நம் அத்தனை நினைவுகளையும் ஒரு சொட்டுக் கண்ணீரால் நனைத்து அனுப்புகிறேன். வாசலில் காத்திருந்து வந்ததும் சிரிப்பில் வரவேற்று சாப்பிட்டாயா என்பதை சைகையில் விசாரித்து பேசினால் மேல் மாடியில் கேட்டு விடுமோயென இதயம் துடிக்கும் சப்தங்களோடு கட்டியனைத்திருந்த நாட்களை எல்லாம் ஒரு … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 52

நான் – வெளிநாடு வந்து சில வருடங்கள் ஆகிறது இம்முறை – திருமணக் கனவோடு ஊர் செல்கிறேன்.. ஊரில் எனக்கென்று முன்னதாகனவே பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது. முதன் முதலாய்.. நானும் அவளும் சந்திக்கிறோம் இன்றெனக்கு நிச்சயதார்த்தம். அடுத்த சில தினங்களில் திருமணமும் முடிய.. காதல் பறவைகளை போல் வாழ்வைத் துவங்கினோம். வாழ்க்கை சில தினங்கள் … Continue reading →

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

பசியை ரசித்திரு.. (25)

எங்கோ ஒரு ஜீவன் ஒவ்வொரு பசி வேளையின் போதும் திருடவோ – ஏமாற்றவோ – பொய்சொல்லவோ – அல்லது இறக்கவேணும் தன்னை தயார் படுத்திக் கொண்டுதான் பசி தாங்கி அலைகிறது, புறம் நான்கும் பணம் இருந்தென்ன, உடுத்தும் ஆடைக்குபதில் கடை விற்றென்ன, கோடிகளை கொட்டி அடுக்கி வைத்தென்ன – ஒருவேளை பசியை – ரசித்ததுண்டா பணம் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 17

உனக்காக நான் தேடித் தேடி வாங்கிய விளையாட்டுப் பொருட்களை உனக்கு அதிகம் பிடிப்பதில்லை, உனக்குப் பிடித்ததெல்லாம் உடைந்த காரும் வீட்டு உபயோகப் பொருட்களும் கைகால் இல்லாத பொம்மைகளும் தான். சரி வேறென்ன செய்வதென உடைந்த பொம்மைகளையெல்லாம் பாதிவிலைக்கு வாங்கிவந்தேன், நீ தூக்கி என்மீதெறிந்து விட்டு புதியது வாங்கித் தா என்றாய், நான் புதிய பொம்மைகளை தேடி … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 16

குச்சி மிட்டாய் காட்டுகலக்கா கைவிரல் அப்பளமென்றால் உனக்கு கொள்ளை இஷ்டம், கடைக்கு போகும்போதெல்லாம் கேட்பாய், வாங்கிக் கொண்ட கணம் துள்ளி ஒரு குதிகுதிப்பாய் குதூகலத்தில் கைதட்டி சிரிப்பாய் அந்த சிரிப்பை காண்பதற்காகவே சிலநேரம் – அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்