சில கவிஞர்களை பற்றி, தமிழக அரசின், இணைய பல்கலைகழக பட்டம் பெறுவதற்கான பாடத்தில் எழுதப் பட்டுள்ளது. அதில் நம்மை பற்றியும் குறிப்பிட்ட பாடத்திட்ட நிர்வாக குழுவிற்கும், பாட ஆசிரியர் முனைவர் கு.மகுடீஸ்வரன் அவர்களுக்கும், உங்களுக்கும், கடவுளிற்கும், முகில் பதிப்பகத்திற்கும் நன்றி!
எத்தனை கால உழைப்பு., எத்தனை இரவுகளின் தூக்கம் விழுங்கிய அங்கிகாரம். எனக்கொன்றும் பதவிக்கும் விருதிற்கும் பெருத்த ஆசைகளில்லை. ஆனால் எங்கேனும் ஒரு விருது கிடைத்துவிடாதா என தென்படும் விருதிற்கெல்லாம் அனுப்ப முயற்சிப்பேன், அண்டை தேசத்தில் வசிப்பதால் அது கூட இயலாமல் போகும்.
அதற்கான அவசியம் விருதை பெற்றுக் கொன்டாடுவதற்கல்ல. இப்படியும் ஒருவன் நமக்காய் எழுதித் திரிகிறான் என்றறிவிக்க மட்டுமே.
அந்த ஒரு அவஸ்த்தை இந்த ஒரு ஆறுதலில் தீர்ந்து போனது. நான் செய்வது எத்தனை சரியென்பதே என் கேள்வியும், பயணத்திற்கான முடக்கமுமாக இருந்துவர; தற்போது என் பயணம் இப்படியே தொடரலாமென்ற தகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு மீதியை கடவுளின் செயலென விட்டு விடுகிறேன்.
அனைவருக்கும் நன்றி!!
//தோழர்களுக்கு வணக்கம்,
இணைய பல்கலைகழக பாடத்தில் ஐயா அறிவுமதி, இலக்குமி குமாரன், ஞான திரவியம், என்.டி.ராஜ்குமார், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா, சுகந்தி சுப்பிரமணியம், குட்டிரேவதி, வெண்ணிலா, உமா மகேஸ்வரி மற்றும் நம் வித்யசாகரை பற்றியும் மிக சிறப்பாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.
இது தங்களின் தெரிவிற்கான மின்னஞ்சல்.
பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியை சொடுக்கவும்:-
http://tamilvu.org/courses/couindex.htm
பின், பாடங்கள் சொடுக்கவும் ~ DO414 புதுமை இலக்கிய வகைமையும் வடிவமும் சொடுக்கவும் ~ DO4142 கவிதை மரபும் மாற்றமும் சொடுக்கவும் ~ பாட அமைப்பு சொடுக்கவும் ~ 2.5 தொண்ணூறுகளுக்குப் பின் கவிதைகள் சொடுக்கவும் ~ 2.5.1 மண் சார்ந்த கவிதைகள் முழுதையும் படிக்கவும்.
நன்றிகளுடன்..
முகில் பதிப்பகம் //

























மிக…வும் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள், மேலும் பல விருதுகள், பாராட்டுகள் பெற வாழ்த்துக்கள்
LikeLike
மிக்க நன்றி தமிழ்தோட்டம், எழுதியவன் மட்டுமே நான். கொண்டுபோய் அங்கு சேர்த்தவர்கள் நீங்களெல்லோரும் தானே..
LikeLike
கலக்கிட்டீங்க வித்யா. வாழ்த்துக்கள். நிறைய நிறைய வாழ்த்துக்கள். இன்னும் நிறைய உலகறிய வரணும். பெரிய பெரிய விருதுகளை எங்கள் கவிஞர் வாங்க வேண்டும். பாராட்டுக்களும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் வித்யாசாகர் அவர்களே!!
LikeLike
மிக்க நன்றி மனோ.., என்னடா மனோவை காணோமேன்னு நினைத்தேன்.
“ஒவ்வொரு துளி உழைப்பும் வாழ்வின் இரட்டிப்பு வெற்றிக்கு; நாம் செலுத்தும் மூலதனமின்றி வேறல்ல” என்பதை மட்டுமிங்கு நினைவில் கொள்வோம் மனோ!
மிக்க நன்றி!
LikeLike
Xlent Vidhyasaagar.. keep it up..ungaludaiya ella muyarchikkum en vaazhuthukal, sokka vaikkum ungalin ezhuthukalaal kalakugireenga!!!!! Weldone
மகோன்னதம் வித்யாசாகர். இன்னும் வளர்க. உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் என் வாழ்த்துக்கள். சொக்கவைக்கும் எழுத்துக்களால் கலக்குறீங்க!!!
வாழ்த்துக்கள்!
LikeLike
உங்களின் வாழ்த்திற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி தோழி. நீங்கள் சொல்வது மிக்க நிஜமெனில் அதன் காரணகர்த்தா நீங்களுமாகிய இச்சமூகமும் இறைவனுமென்றே கொள்க!
LikeLike
வாழ்த்துக்கள் வித்யாசாகர் அவர்களே.. கல்யாணி.K
LikeLike
மிக்க நன்றி சகோதரி.. உங்களனைவரின் வாழ்த்துக்களால் மிக்க வளம் பெற்றதாகவே உணர்கிறேன்!
LikeLike
Paaraattukkal vidyaa
LikeLike
மிக்க நன்றி மாதவன். தொடர்ந்து வாருங்கள். தொடர்ந்து தங்களின் விமர்சனத்தால் எனை போன்றோரின் வளர்ச்சிக்கு முழு பலமாய் இருங்கள்.
LikeLike
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் வித்யாசாகர்
LikeLike
மிக்க நன்றி சலீம். உங்களின் எதிர்பார்ப்பில் தான் மலர்கிறது எங்களை போன்றோரின் வெற்றியெல்லாம். நீங்கள் எத்தனை நம் எழுத்துகளை படிக்கத் தயாரோ அத்தனை நான் எழுதவும் என்னை தயார்படுத்திக் கொள்கிறேன் சலீம்.
LikeLike
wish u all..
LikeLike
மிக்க நன்றி பொய்காரரே. இது அனைவருக்குமான வாழ்த்து தான். என் சார்பாகவும் மற்ற அனைவருக்குமான வாழ்த்துக்களை தெருவிக்கிறேன்!
LikeLike
வாழ்த்துக்கள் வித்யாசாகர் …………….
LikeLike
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி கனி. குவைத்தின் நெடுஞ்சாலை வரை என் கவிதைகளை சுமந்து வித்யாசாகரை குவைத்திலும் நிலைகொள்ள செய்த நன்றி கடன் தங்களின் தமிழ் டாட் காம் இதழிற்கும் உண்டு.
LikeLike